பசு - பண்ணையில் இருந்து நீக்கம்

மாடுகளின் (கால்நடைகளின்) நீக்கம்

மந்தைகளில் உள்ள கால்நடைகளில் குறைந்த உற்பத்தி கொண்ட மாடுகள் இனவிருத்தி பாதிக்கப்பட்ட மாடுகள் மிகவும் மெலிந்து சரியாக வளராத மாடுகள் குணப்படுத்த முடியாத நோய் பாதிக்கப்பட்ட மாடுகள் மிகக் கடுமையான நோய்களான டியூபர்குளோசிஸ், ஜோகன்ஸ் நோய், ஃபுரூசெல்லோசிஸ், மடியை இழந்த (அ) பாதித்த மாடுகள், மடி வீங்கி பால் குறைந்துள்ள மாடுகள் போன்ற பொருளாதார அளவில் இலாபத்தைக் குறைக்கக் கூடிய சேதம் ஏற்படுத்தக் கூடிய கால்நடைகளை மற்தையை விட்டு வெளியேற்றுவதே கால்நடை நீக்கம் ஆகும். சில இளம் மாடுகளிலேயே விரும்பத்தகாத பண்புகள் காணப்படும். தூய கலப்பற்ற இனங்களில் உருவாகும் கால்நடைகளில் சில இனவிருத்தி செய்ய முடியாத மெலிந்த கொம்புகளுடன், மடி பாதிப்படைந்து அல்லது மடி சரியான வளர்ச்சியின்றி காணப்படுகின்றன. இவ்வாறு வளர்ச்சி குன்றியோ உறுப்புகளில் காயங்களுடனோ உறுப்புகளை இழந்தோ, சரிசெய்ய முடியாத காயங்களுடனும் இருக்கும். இதற்கு மாடுகளை மந்தையிலிருந்து பிரித்து விடுதல் நலம். அப்போதுதான் மற்ற கால் நடைகளைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும். அவ்வாறு பிரித்த மாடுகளைப் பற்றிய தகவல்களை கையேட்டில் பதித்து அவந்நை முநையாகப் பராமரிக்க வேண்டும். இவை நீக்கிய கால்நடைப் பதிவேடு எனப்படும்.

கறவை மாடுகள குறைந்த பால் உற்பத்திக்காக நீக்கும்போது முதல் இரு கறவைப் பருவங்களில் அதன் பால் உற்பத்திளைக் கவனிக்க வேண்டும். பால் உற்பத்தி அப்போது எதிர்பார்த்த அளவை விடக் குறைவாக இருந்தால் கறவையை நீக்கி விடலாம். மிகவும் வயதான மாடுகளைப் பராமரிப்பது பொருளாதார ரீதியில் பலனளிக்கிகாது. எனவே அவற்றை நீக்கி விடுதல் நன்று.
cattle_culling
நீக்கப்பட்ட கால்நடைகள்

காளைக்கன்றுகள் கலப்பிற்கு மட்டுமே தேவைப்படும். அதிகளவு எண்ணிக்கையில் தேவைப்பட்டதால் தேவையான வற்றைத் தவிர மற்றவையை விற்றுவிடலாம். கண் தெரியாமல், கண்ணில் கோளாறுடன் பிறக்கும் கன்றுகளையும் மிகக்குறைவான எடையுடன் பிறக்கும் கன்றுகளையும் நீக்கவேண்டும். இவ்வாறு வருடம் ஒரு முறையேனும் கால்நடைகளை தரம்பிரித்து நீக்குதல் வேண்டும்.

(ஆதாரம்: http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf)

கால்நடை நீக்கத்திற்கு 10 வழிமுறைகள்:
  1. குறையற்ற கால்நடைகளை எக்காரணம் கொண்டும் வெளியேற்றுதல் கூடாது
  2. முதலில் குறையை நிவர்த்தி செய்ய முடியுமா என ஆராய வேண்டும். முடியுமெனில் தகுந்த முறையில் குறையைச் சரி செய்து பின்பு மந்தையில் சேர்த்துக் கொள்ளலாம்
  3. மந்தையிலிருந்து வெளியேற்றும் வரை கால்நடைகளுக்கு தகுந்த உணவு அளிக்க வேண்டும். இல்லை யெனில் அவை சக்தியிழந்து சோர்வடைந்துவிடும்
  4. கறவைகளை வெளியேற்றம் முன்பு அதில் உள்ள பாலை முற்றிலும் கறந்து கொள்ள வேண்டும்
  5. கால்நடைகளைக் கொண்டுசெல்ல நன்கு அறிந்த கால்நடைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருக்கும் முகவரிகளை அணுக வேண்டும்
  6. சரியான பாதுகாப்போடு முறையாகக் கொண்டுசென்று சேர்க்கும் முகவரிகளிடம் மட்டுமே கால்நடைகளை அனுப்ப வேண்டும். சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பார்களாவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
  7. மிக மோசமான நிலையில் உள்ள மாடுகளை பரிமாற்றம் செய்வதைத் தவிர்த்தல் நலம்
  8. நிற்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்குத் தகுந்த சிகிச்சையளித்து முறையான நடவடிக்கையுடன் அனுப்புதல் நலம்
  9. காயம் ஆறாத, எலும்பு, முடடிகளில் காயம் உள்ள கால்நடைகளை நேரடியாக செயலகத்திற்கே அனுப்பிவிடுதல் நலம்
  10. கால்நடைகளை வெட்டி பதனிடுவதற்குத் தகுதியற்றதாக இருந்தால் அதை பதனிடும்தொழிற்சாலைக்கு அனுப்புதல் வீண் நல்ல கால்நடை மருத்துவரிடம் சோதித்த பின்பு அனுப்புதல் நலம் ஆகும்.

Read more...

பசு - கால்நடைப் பதிவேடுகள் பராமரித்தல்

கால்நடைப் பதிவேடுகள் பராமரித்தல்
ஒரு நல்ல இலாபகரமான பண்ணைப் பராமரிப்பிற்கு கீழ்க்கண்ட பதிவேடுகள் அவசியம் ஆகும்.
1) கால்நடைகளை அடையாளம் காண உதவும் கையேடு

2) வளர்ச்சிப் பதிவேடு

3) உடல்நலம் பற்றிய பதிவேடு

4) கால்நடை இழப்பு / இறப்பு குறித்த பதிவேடு

5) கன்றுகளின் இறப்பு பற்றிய பதிவேடு

6) இனக்கலப்பு மற்றும் கன்று ஈனுதல் பற்றிய தகவல்
அடங்கிய பதிவேடு

7) கறவை மாடுகளின் பால் உற்பத்தி பற்றிய பதிவேடு

8) அடர் மற்றும் கலப்பு தீவனங்கள் பற்றிய பதிவேடு

9) வேலை ஆட்களின் பதிவேடு

10) நீர்ப் பயன்பாடு / தேவை குறித்த பதிவேடு

11) சரியான வளர்ச்சியற்ற மாடுகள் (நீக்கிய மாடுகள்) பற்றிய பதிவேடு

12) விற்ற கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு

13) வாங்கிய கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு
cattle_records

Read more...

பசு - பால் பண்ணையின் பொருளாதாரம்

பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன
  1. ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
  2. ஒரு பருவக் காலத்தில் பால் தரும் நாட்கள் / பால் உற்பத்திக் காலம்
  3. பால் உற்பத்தி நிலைத்தன்மை
  4. முதல் கன்று ஈனும் வயது
  5. சினைப் பருவம்
  6. பால் வற்றிய நாட்கள்
  7. அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி
  8. இனப்பெருக்கத் திறன்
  9. தீவனம் உட்கிரகிக்கும் நாள்
  10. நோய் எதிர்ப்புத் திறன்
1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு

ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே ஒரு பருவ பால் உற்பத்தி ஆகும். பொதுவாக அயல்நாட்டு இனங்களை விட நம் நாட்டுப் பசுக்களில் உற்பத்தி குறைவு. இது மொத்தம் ஈன்ற கன்றுகள், பால் கறக்கும் இடைவெளி மற்றும் பாலின் நிலைத்தன்மையைப் பொறுத்தது. முதல் பருவத்திலிருந்து போகப்போக 3 - 4 வது பருவம் வரை பால் உற்பத்தி 30 - 40 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதன் பின்பு குறைய ஆரம்பிக்கும். இரு இனங்களுக்கிடையே பால் உற்பத்தியின் அளவை ஒப்பிட அதன் பால் உற்பத்திக் கொழுப்பு சரிசெய்யப்பட வேண்டும். 4 சதவிகிதம் கொழுப்பு சரிசெய்த பால் = 0.4 மொத்த பால் + 15 மொத்தக் கொழுப்பு கன்று ஈன்ற (Parturitiion) பிறகு பால் உற்பத்தி அதிகரித்து ஈன்ற 2 - 4 வாரங்களுக்கு உற்பத்தி மிக அதிகமாக இருக்கும்.
இதுவே அப்பருவத்தின் (நிறை) அதிக உற்பத்தி அளவாகும். இந்த அதிக உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நம் இந்திய இனங்களில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.
2.பால் உற்பத்திக் காலம்

ஒரு கன்றுப் பருவத்தில் பால் தரும் மொத்த நாட்கள் பால் உற்பத்திக் காலம் ஆகும். சராசரி பால் உற்பத்தி நாட்கள் ஒரு வருடத்திற்கு 305 நாட்கள் ஆகும். குறுகிய காலமாக இருந்தால் 33 நாட்கள் குறையும். குறுகிய இந்திய இனங்கள் குறைந்த உற்பத்திக் காலமே கொண்டவை. சில இனங்களில் உற்பத்திக்காலம் அதிகமாக இருந்தாலும் பால் மிகக்குறைந்தளவே இருக்கும்.

3.பால் உற்பத்தியின் நிலைத்தன்மை
.

அதிக உற்பத்தியால் பாலின் உற்பத்திக்காலம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் 2-4 வாரங்களில் வரும் பாலின் உற்பத்தி விரைவில் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவதே நிலைத்தன்மை, பால் குறையும் தன்மை குறைந்தளவே இருக்குமாறு பராமரித்தல் அதிக உற்பத்திக்கு உதவும்.

4.முதல் கன்று ஈனும் வயது


அதிக நாள் உற்பத்திக்கு முதல் கன்று ஈனும் வயது முக்கியமான ஒன்று. இந்திய இனங்களில் முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்கள். கலப்பினங்களில் 2 வருடங்கள். எருமை மாடுகளில் மூன்றரை வருடங்கள் ஆகும். முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருந்தால் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஆனால் மொத்தம் ஈனும் கன்றுகள் அளவு குறைவதால் பால் பருவமும் குறையும்.

5.சினைக்காலம்ள


இது கன்று ஈன்று பால் வற்றிய பின்பும் அடுத்த கருத்தரிப்புக்கும் உள்ள இடைவெளியாகும். சரியான நேரத்தில் சினை எய்த வைத்தல் மன அழுத்தத்தைப் போக்கிப் பசுவை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இனப்பெருக்க உறுப்புக்கள் சரியான வயதில் தன்னிலை எய்தவும் இது உதவுகிறது. சராசரி சினைக்காலம் 60-90 நாட்கள். இந்நாட்கள் நீடித்தால், அடுத்த கன்று ஈனுவதும் தள்ளிப்போகும். அதே சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், பசுவின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடனடி கர்ப்பத்தால் பால் உற்பத்தி குறையும். எனவே சரியான இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்.

6.பால் / மடி வற்றிய நாட்கள்


இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள் வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த சத்துக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள சிறிது ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய இடைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும் கன்றும், ஆரோக்கியமாக இருக்காது.

7.கன்று ஈனும் இடைவெளி


அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி கன்று ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களுக்கு ஒரு கன்றும் ஈனுதல் வேண்டும். கன்றுகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம் ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும்.

8.இனப்பெருக்கத் திறன்


பசுவின் அதிகக் கன்றுகள் ஈனும் திறன், அதன் இனப்பெருக்கத் திறனைப் பொறுத்தது. இனப்பெருக்கத் திறன் மரபியல் குணாதிசியங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனை முதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்று இடைவெளி, சினையாகும் காலம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சில மரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக்கும் இத்திறன் மாறுபடுகிறது. சாதகமற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள் அதிக உற்பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்கப்படாது.

9.தீவனம் உட்கொள்ளும் எடுக்கும் மற்றும் உட்கிரகிக்கும் திறன்


மாடானது நிறைய தீவனம் உட்கொள்வதோடு அதை நன்கு உட்கிரகித்துப் பாலாக மாற்றும் திறனுடையதாக இருக்க வேண்டும்.

10.நோய் எதிர்ப்பு


இந்திய இனங்கள் அயல் நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்தவையாக உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம்.

(ஆதாரம் : http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf

Read more...

பசு - செயற்கை முறை கருவூட்டல்

செயற்கை கருத்தரிப்பு முறை
அறிமுகம்

செயற்கைக் கருத்தரிப்பு என்பது ஆண் இனப்பெருக்க உறுப்பிலிருந்து உயிருள்ள விந்தணுக்களை சேகரித்து சரியான நேரத்தில் சரியான முறையில் பெண் இனப்பெருக்க உறுப்புடன் சேர்ப்பதே ஆகும். இதன் மூலம் நாம் சாதாரண கன்றை  போலவே இளம் தலைமுறையைப் பெற முடியும். இதில் காளை மாட்டின் விந்தணுக்களைச் சோதித்து கருப்பையில் மேம்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சரியான தருணத்தில் செலுத்தி இளம் தலைமுறை பெறப்படுகிறது. முதன் முதலில் 1780ல் லாஸானோ ஸ்பால்பன்சானி என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் வளர்ப்புப் பிராணிகளில் நாயில் செயற்றைக் கருத்தரிப்புச் செய்தார். அவரது விளக்கப்படி கருத்தரித்தல் விந்தணுவில் தான் நடைபெறுகிறது. விந்தணுவின் நீர்ப்பகுதியில் அல்ல என்று கூறினார். அதன் பின்பு நடந்த பல ஆராய்ச்சிகள் மூலம் இக்கருத்தரிப்பு முறை பயன்பாட்டிற்கு வந்தது.
இச்செயற்கைக் கருத்தரிப்பு முறை கால்நடைகளில் நன்கு பயன்படுகிறது. கால்நடைகளில் தேவையான பண்புகளைப் பெற அயல்நாட்டுக் கால்நடைகளை நம் நாட்டு இனங்களுடன் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் பெறலாம். ஆனால் இம்முறையில் கருத்தரிப்பு செய்யும் போது சில மரபியல் குணங்கள்  இழக்கப்படுகின்றன.
சினையின் பருவ அறிகுறிகள்
  1. மாடு அமைதியின்றிக் காணப்படும்.
  2. அடிக்கடி அடிவயிற்றை எக்கிக் கத்திக்கொண்டே இருக்கும்.
  3. அருகிலுள்ள மாடுகளின் மேல் அது தாவும். மேலும் மற்ற காளைகளோ / மாடுகளோ தன் மீது தாவ அனுமதிக்கும்.
  4. மந்தையாக மாடுகளை மேய்க்கும் போது, கூட்டத்திலிருந்து தனியாக ஒதுங்கி நிற்கும்.
  5. உடல்வெப்பநிலையின் அளவு சிறிது அதிகரித்துக் காணப்படும்.
  6. சிறிது சிறிதாக சிறுநீர் கழிக்கும். எருமைகளில் அதிகம் காணப்படும்.
  7. வாலை ஒதுக்கிக் கொண்டே இருக்கும்.
  8. பசுக்களின் பிறப்பு உறுப்பின் வெளி உதடுகள் தடித்தும் வழவழப்பாகவும் சிவந்தும் காணப்படும். கண்ணாடிப் போன்ற திரவம் பசுவின் பிறப்பு உறுப்பிலிருந்து வழிந்து தொங்கிக்கொண்டிருக்கும்.
  9. கண்களின் கருவிழிப்பார்வை விரிந்திருக்கும்.
  10. கறவையில் உள்ள மாடாக இருந்தால் பாலின் அளவு 2-3 நாட்களுக்குக் குறையும்.
செயற்கைக் கருத்தரித்தலின் நன்மைகள்
  1. மந்தையில் கலப்பிற்கென காளை மாடுகள் வளர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை எனவே காளை மாடுகள் பராமரிப்புச் செலவு குறையும்.
  2. இது காளையிலிருந்து நோய் பரவுவதைத்  தடுக்கும்.
  3. முன்பே விந்துக்களைச் சேகரித்துத் தரம் பிரித்து வைப்பதால் குறைந்த தரம் கொண்ட விந்துக்களை அகற்றிவிடலாம்.
  4. இளம் கன்றுகள் உருவாகுவது பற்றி முன்பே தெரிந்து கொள்ளலாம்.
  5. விந்து சேகரித்த காளை மாடு அழிந்து / இறந்து விட்டாலும் தேவையான அளவு விந்தணுவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
  6. விந்துவை கிராமம் / நகரம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.
  7. இது கரு உருவாதலை உறுதி செய்கிறது. மேலும் எந்த ஒரு (பசு (அ) காளை) மாட்டிற்கும் கலப்பினால் ஏற்றுக் கொள்ளாவிடினும் மீண்டும் கலப்புச் செய்யலாம்.
  8. இது சரியான சினைத் தருணத்தைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுகிறது.
  9. கருவுருதலை அதிகப்படுத்துகிறது.
  10. பதிவேடுகளைப் பராமரிப்பது எளிது.
  11. பழைய, எடை அதிகமான, காயம் பட்ட காளைகளிலிருந்த கூட விந்தணுவை சேகரிக்கலாம்.
தீமைகள்
  1. நன்கு திறமையான தெரிவு முறைகளும் உபகரணங்களும் தேவை.
  2. இது இயற்கை முறையைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
  3. இனப்பெருக்கம் பற்றி முற்றிலும் தெரிந்த திறமை வாய்ந்த நபர்கள் தேவை.
  4. சரியாக சுத்தம் செய்யப்படாத கருவிகளைப் பயன்படுத்தும் போது அதன் விந்துத் திறன் குறைய வாய்ப்புள்ளது.
  5. காளையை சரியாக பரிசோதிக்காமல், சோதனைக்குட்படுத்தாமல் விந்து சேகரித்தால் பல மரபியல் நோய்கள் பசுவிற்குப் பரவக்கூடும்.
  6. காளைகளில் நல்ல உற்பத்தித்திறன் மிக்க காளைகள் மட்டுமே தேவைப்படுகின்றன.
விந்து சேகரித்தல் மற்றும் பகுத்தாய்தல்

விந்துக்களை சேகரிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலத்திற்கேற்ப சேகரிப்பு முறைகளும் புதிய முறைகள் பின்பற்றப்படுகிறது. பொதுவாக விந்து சேகரிக்க 3 முறைகள் பயன்பாட்டில் உள்ளன. அவைகளாவன.
  1. செயற்கை சினைப் பை மூலம் விந்து சேகரித்தல்
  2. மின்னூட்ட முறை
  3. மலப்புழை வழியே ஆண் இனப்பெருக்க உறுப்புப் பகுதியை பிசைதல் மூலம் சேகரிக்கலாம்.
செயற்கை சினைப் பை மூலம்
  • செயற்கை பை ஆனது கீழ்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • உறுதியான இரப்பரால் ஆன உருளை, இரண்டு பக்கத் துவாரங்களைக் கொண்டும், மேலும் அதன் மேல் பகுதி காற்று, நீர் சென்ற வர உள் மற்றும்  வெளிப்பகுதியைக் கொண்டும் காணப்படும்.
  • உள் இரப்பர்
  • விந்துக்களை சேகரிக்கும் குடுவை
விந்துச் சேகரிப்பிற்கு செயற்கை சினைப் பையை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றை தகுந்த முறையில் கழுவி முறைப்படி சுத்தம் செய்து வைக்கவேண்டும். சினைப்பையை அமைக்க முதலில் உள் இரப்பை இரப்பர்  உருளையில் இருக்கும்.
ஒரு துவாரப் பகுதியின் வழியே கொண்டு சென்று மறு துவாரம் பகுதியின் வழியே வெளியே மடக்கவேண்டும். பிறகு இரப்பர் உருளையின் மேல்பகுதியில் உள்ள நீர்த் துவாரம் வழியே சூடேற்றப்பட்ட 45 டிகிரி செல்சியஸ் தண்ணீரை ஊற்றவேண்டும். பிறகு அளவுகள் குறிக்கப்பெற்ற விந்து சேகரிக்கும் குடுவையை செயற்கை சினைப்பையின் குறுகிய முனைப்பகுதியில் செருகவேண்டும். பின்னர் செயற்கை சினைப்பையின் உள்பகுதியில் ஜெல்லியை தடவவேண்டும். அதன் மூலம் நீர்ப்பகுதியில் அழுத்தத்தை உருவாக்கலாம்.  இவ்வாறு செய்வதன் மூலம் இயற்கையான சினைப்பை அமைப்பை செயற்கை முறையில் உருவாக்கலாம்.
ஒவ்வொரு முறை விந்து சேகரிக்கும் போதும் செயற்கை சினைப் பையின் வெப்பநிலையைச் சரிபார்த்துக்கொள்ளவேண்டும். காளைகள் தாமதித்தாலோ, செயற்கை சினைப்பையில் வெப்பநிலை குறைந்தாலோ விந்து வெளிப்படும் தன்மை மாறுகின்றது. அவ்வாறு விந்து வெளிப்பட்டாலும் வெளிவரும் விந்து சிறுநீர் போன்றவற்றில் அசுத்தம் அடைந்து உபயோகம் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகம்.
செயற்கை கருப்பை மூலம் விந்து சேகரிக்கும் செயல்முறை

பசு அல்லது பொம்மை மாடு இருக்கும் இடத்திற்கு காளை மாட்டைக் கொண்டு வரவேண்டும். காளைகள் இனச்சேர்க்கைக்கு பசு அல்லது பொம்மை மாட்டின் மீது ஏறும் போது சுமார் 45 டிகிரி கோணத்தில் காளையில் இனச்சேர்க்கை உறுப்பிற்கு (ஆண்குறி) ஏற்றவாறு வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கையினால் பிடித்துக்கொள்ளவேண்டும். பிறகு காளை இனச்சேர்க்கைக்கான பசு மீது ஏறும் போது, ஆண் குறியின் தோல் பகுதியைப் பிடித்து மேலும் காளையின் ஆண்குறியின் முனைப்பகுதி செயற்கை கருப்பையினுள் உள்ளே செல்ல வழிவகுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ஆண்குறியின் சிவந்த பகுதியைத் தொடாமல் இருப்பது நன்மை பயக்கும். காளை ஏறி இறங்கிய பின்னர் செயற்கை கருப்பையில் உள்ள காற்றுத் துவாரத்தை திறப்பதன் மூலமும், நீர்த் துவாரத்தைத் திறப்பதன் மூலமும் நீரை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் செயற்கை கருப்பையிலுள்ள விந்துவானது விந்து சேகரிக்கும் குடுவை அதன் இணைப்பில் இருந்து அகற்றி அக்குடுவைக்கு எவ்வித அசுத்தம் ஏற்படாதவாறு, அதனை பஞ்சு கொண்டு துடைத்து ஆராய்ச்சிக்கூடத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

cattleSemen Collection
விந்து சேகரிப்பு

விந்து பாதுகாப்பு

சேகரிக்கப்பட்ட விந்துக்களை உறை நிலைக்குக் கொண்டு சென்று 16 ஆண்டுகள் வரை பாதுகாக்க முடியும். 1949ல் பிரிட்டிஷ் அறிஞர் ஒருவர் விந்துப் பாதுகாப்பில் கிளிசராலை விந்துவுடன் சேர்க்கும் போது அது விந்து உறைதலைக் குறைப்பதைக் கண்டறிந்தார். மேலும் கிளிசரால் விந்துவிலுள்ள நீரை நீக்குவதால் விந்துவினுள் குளிர்க்(ஐஸ்) கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இக்குளிர்கட்டிகளின் சேதத்திலிருந்து விந்துவைப் பாதுகாக்க முடியும். விந்துவை உறைய வைத்துப் பாதுகாப்பதில் 2 முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை.
1. உலர் பனிக்கட்டி மற்றும் ஆல்கஹால் (100 டிகிரி பாரன்ஃஹீட்)
2. நீர்ம நைட்ரஜன் (320 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது 190 டிகிரி செல்சியஸ்)
இவ்விரண்டில் நீர்ம நைட்ரஜன் (Liquid Nitrogen)சிறந்தது. ஏனனெில் இம்முறையில் விந்துவின் தன்மை குன்றாமல் அப்படியே நீண்ட நாட்கள் வரை இருக்கும். ஆனால் உலர் பனிக்கட்டி ஆல்கஹால் முறையில் விந்து சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாவிடில், அதன் வளம் குன்ற வாய்ப்புள்ளது. நீர்ம நிலையில் உள்ள விந்துவை 40 டிகிரி பாரன்ஃஹீட்டில் 1 முதல் 4 நாட்கள் வரை பாதுகாக்க முடியும்.
விந்தானது கண்ணாடியாலான குடுவை போன்ற அமைப்பில் சேகரித்து வைக்கப்படுகிறது. மற்றொரு முறையில், ஃபிரெஞ்ச் குழாய் அமைப்பில் சேகரித்து வைக்கப்படுகிறது. பல செயற்கைக் கருவூட்டல் நிறுவனங்கள், இந்த பிரெஞ்ச் குழாய் அமைப்பையே பின்பற்றுகின்றன.
சில முறைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எந்த இனத்திலிருந்த எடுக்கப்பட்ட விந்து என்பதை இனங்காணுதல் எளிது. எந்த முறையில் சேகரித்தும் பாதுகாத்தாலும் ஒவ்வொரு காளையின் விந்துவுக்கும் தனித்தனியே அடையாளக் குறியிடுதல் அவசியம்.
விந்துவை உட்செலுத்தும் முறைகள்

வெவ்வெறு இனங்களைப் பொறுத்து பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவை.
  1. ஓட்டை வழியே உட்செலுத்துதல்
  2. சினைப் பையில் விந்துவை வைத்தல்
  3. மலப்புழை வழியே விந்துவை உட்செலுத்துதல்
மலப்புழை வழியே விந்துவை உட்செலுத்துதல்

கால்நடைகளில் இந்த முறையே பரவலாகக் கையாளப்படுகிறது.சூட்டில் உள்ள மாட்டை, கால்நடை மருந்தகம் அல்லது விந்து உட்செலுத்தம் செய்யும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும். சினை ஊசி போடுபவர் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பின்பு உறைநிலையிலிருந்த விந்துவானது தன்னிலை (நகரக்கூடிய நிலை) அடைந்தவுடன் கிருமி நீக்கம்  செய்யப்பட்ட செயற்கைக் கருவூட்ட ஊசியினுள் போடவேண்டும். பின்பு அதை ஒரு பிளாஸ்டிக் உறையால் மூடிவிடலாம். சினை ஊசி போடுபவர் இடது கையில் உறையை அணிந்து கொண்டு சோப்பு போன்ற ஏதேனும் இளக்கியை உறை மேல் தடவிக் கொள்ளவேண்டும். பின்பு இந்த கருவூட்டல் ஊசியை மலப்புழை வழியே கருப்பையின் அருகில் கொண்டு சென்ற விந்துக்குழாயில் வைத்துவிடவேண்டும். குழாயானது உட்சென்று விந்துவை கருப்பையில் சேர்த்து விடும். பின்பு கருவூட்ட உட்செலுத்திய ஊசியை எடுத்துக் கொள்ளவேண்டும்.
cattle_Insemination
உட்செலுத்துதல்
இம்முறையில் ஊசியை உட்செலுத்தி ஊசியானது கருப்பையில் கொண்டு சென்று விந்துவை வைக்க ஒரு விசை செலுத்தப்படுகிறது. பின்பு ஊசி வெளியில் எடுக்கப்பட்டு விடுகிறது.
குடுவை உட்செலுத்தும் முறை

இம்முறையில் ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையானது பசுவின் சினைப்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடுவை வழியே விந்துவை செலுத்தி கருப்பையில் விந்து விழுமாறு செய்யப்படுகிறது. இம்முறையில் குடுவையானது நன்கு கழுவி கிருமி நீக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
சினைப்பை முறை

இம்முறையில் விந்து உட்செலுத்தும் ஊசியை கையிலேயே எடுத்துச் சென்று சினைப்பையில் விந்து விடுவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது கையில் உள்ள கிருமியால் பெண் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படலாம்.
விந்து சேகரிப்பும், பாதுகாப்பும்

விந்துக்களை சேகரித்து வைக்க, உறைய வைக்கும் முறை கண்டறியப்பட்ட பின்பு தான் விந்துப் பாதுகாப்பு முழுமையடைந்தது. இம்முறை மூலம் விந்துக்களை எந்த ஒரு சேதாரமுமின்றி நீண்ட நாட்கள் சேகரித்து வைக்க முடிகிறது. மேலும் வெகு தூரங்களுக்கு, வேறு கண்டங்களுக்குக்கூட எடுத்துச் செல்வதன் மூலம் பல்வேறு நாடுகளின் அதிக உற்பத்தி உள்ள இனங்களை பரிமாற்றம் செய்து கொள்ள இயலும். இம்முறை முலம் எந்த ஒரு விவசாயியும் தான் வளர்க்க விரும்பும் இனத்தின் விந்துக்களை எளிதில் பெற முடிகிறது.
இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இம்முறை விந்துச் சேகரிப்புக் காணப்படுகிறது. குழாயில் விந்து சேகரித்தல் முதன் முதலில் பிரான்சில் சேகரிக்கப்பட்டது. விந்துவை உறைய வைத்துப் பாதுகாக்கும் முறையில், பல நீர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன.
சோடியம் சிட்ரேட் டைஹைட்ரேட் 2.4-2.0 கிராம் 8.0 மிலி 25.0 சதவிகிதம் கொள்ளளவு 50000 அலகுகள் / 100 மிலி விந்து ஃபிரக்டோஸ் கிளிசரால் முட்டை மஞ்சள் கரு பெனிசிலின் நீர்த்த நீர்மங்கள், டைஹைட்ரோ ஸ்ரெட்டோமைசின் 50 மிகி / 100 மிலி நீர்த்த விந்தணுக்கள் நீர்த்த இரு கண்ணாடியில் காய்ச்சி வடித்த நீர் 100 மிலி.
கிளிசரலானது விந்துவில் உள்ள நீரை உறிஞ்சிக் கொள்வதால் அந்நீர் குளிர் கட்டிகளாக மாறுவது தடுக்கப்படுகிறது. இல்லையெனில் 196 டிகிரி செல்சியஸ் குளிர் கட்டிகள் விந்துக்களை சேதப்படுத்தும். இக்கலவையில் சுக்ரோஸ் சேர்ப்பதால் நீண்ட நாட்களுக்கு விந்துவிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
உறையவைக்கப்பட்ட விந்துவானது ஒற்றை இழைக் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கால் ஆன உறிஞ்சு குழலில் + 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அடைக்கப்படுகிறது. உறைநிலை செயலில் கிளிசரால் அளவு 7-7.6 சதவிகிதம் இருக்கவேண்டும். நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்த கிருமி நாசினிகளைச் சேர்க்கவேண்டும். விந்துவானது 1 மி.லி விந்துவில் 20 மில்லியன் நகரும் விந்தணுக்கள் மட்டுமே இருக்குமாறு, அடர்வு நீக்கம் செய்யப்பட வேண்டும். விந்துவை உறை நிலைக்கு எடுத்துச் செல்லும் போது படிப்படியாக வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். வெப்பநிலை இறுதியில் -79 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். 3-5 நிமிடங்களுக்குள் -75 டிகிரி செல்சியஸ் கொண்டு வருதல் விரைவுக் குளிர்தல் முறையாகும். மெதுவாகக் குளிர்விக்கும் முறையில் +5 டிகிரி செல்சியஸ் லிருந்து -15 டிகிரி செல்சியஸ் வரை நிமிடத்திற்கு 1 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும். -15 டிகிரி செல்சியஸ் -31 டிகிரி செல்சியஸ் நிமிடத்திற்கு 2 டிகிரி செல்சியஸ் குறைக்கவேண்டும். -31 டிகிரி செல்சியஸ் -75 டிகிரி செல்சியஸ் வரை 4-5 டிகிரி செல்சியஸ் நிமிடத்திற்குக் குறைக்கலாம். இந்த முறையில் குளிர்விக்க 40 நிமிடங்கள் ஆகும். பின்பு -76 டிகிரி செல்சியஸ் வரை உடனே குறைத்துக் கொள்ளலாம். உறைய வைக்கப்பட்ட விந்துவானது நீர்த்து, உறை நிலை அடைந்த விந்துக்களின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இவ்வாறு அடர்வு குறைந்த விந்துக்களின் விலையும் குறைவு. மாற்றி மாற்றி ஒன்றுவிட்ட நாட்களில் மீண்டும் உட்செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நீர்ம நைட்ரஜனானது, விந்துவை அதிக நாள் சேகரித்து வைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
கால்நடையில் செயற்கைக் கருவூட்டம்

செயற்கை முறைக் கருவூட்டம் என்பது காளை மாடுகளில் இருந்து விந்தணுக்களைச் சேகரித்து, பாதுகாத்துத் தேவையான போது பசு மாடுகளின் இனப்பெருக்க உறுப்பில் கருவுற வைப்பதாகும். இம்முறையின் மூலம் கால்நடைகளில் கிடைக்கும் பயன்பாடுகளாவன:
விந்தணுக்களின் முழுமையான பயன்பாடு

இயற்கையான இனச்சேர்க்கையில் நிறைய விந்தணுக்கள் தேவைக்கதிகமாகவே மாட்டினுள் செலுத்தப்படுகிறது. இதனால் தேவையான அளவு அதாவது ஏற்றுக் கொண்ட அளவு போக, மீதமுள்ள அனைத்து விந்துக்களும் வீணாகின்றன. அதோடு இயற்கை இனச்சேர்க்கையில் அழுத்தம், வலி போன்றவை அதிகமாக இருக்கும். இவ்விரு குறைகளும் இனச்சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் செயற்கைக் கருவூட்டலில் விந்துக்களை நீர்த்து, தேவையான அளவே செலுத்தப்படுவதல் வீணாவது குறைகிறது. மேலும் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். நம் நாட்டில் இல்லாத, நல்ல உற்பத்தி உடைய இனங்களின் விந்துக்களைப் பிற நாட்டில் இருந்து தருவித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நல்ல மரபியல் திறனுள்ள காளைகளின் விந்துக்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்

செயற்கைக் கருவூட்டலில் குறைந்த காளைகளைக் கொண்டு அதிக அளவு சந்ததிகளை உருவாக்க முடியும். எனவே நமக்குத் தேவையான நாம் விரும்பும் பண்புகள் கொண்ட காளையைத் தேர்ந்தெடுத்து, அதன் மரபியல் குணங்களை ஆராய்ந்து பின்பு அதிலிருந்து பல கன்றுகளை உருவாக்கலாம். இம்முறையில் காளைகளின் திறனை அறிந்து பின்பு அதன் விந்துக்களை சேகரித்துக் கொள்ளலாம்.
குறைந்த செலவு

காளை மாடுகள் பசுக்களை விட அளவில் பெரியவை. இவை தீவனங்களும் அதிக அளவில் எடுக்கும். மேலும் இதற்கான கொட்டகை அமைப்பு, பராமரிப்பச் செலவுகளும் அதிகம். ஆகையால் மந்தையில் குறைந்தது 2 அல்லது 3 காளைகளைப் பராமரிக்க ஆகும் செலவை விட செயற்கைக் கருவூட்டலில் கிடைக்கும் சிறந்த பொலி காளைகளின் விந்துக்களின் செலவு குறைவே.
கால்நடை மற்றும் விவசாயத்திற்கும் பாதுகாப்பானது

காளையானது அளவில் பெரியதாகவும், இனச்சேர்க்கை காலத்தில் அதிக வேகத்துடனும், கட்டுக்கடங்காமல் திரியும். இதனைக் கையாள்வதும் கடினம். மேலும் பசுக்களின் மேல் காளைகள் தாவும் போது பசுவிற்கோ காளைக்கோ காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. செயற்கைக் கருவூட்டலில் இந்த அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன.
நோய் பரவும் அபாயம் குறைவு

இயற்கை முறை இனப்பெருக்கத்தில் காளையில் ஏதேனும் நோயிருந்தால் அல்லது ஏதேனும் நுண்ணியிரிகள் காளையிடமிருந்து பசுவுக்கும் பரவும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் செயற்கை கருவூட்டலில் சேகரிக்கப்பட்ட விந்துவில் ஏதேனும் நோயிருந்தால் அது சோதனை செய்யப்பட்டு நீக்கப்படுகிறது. இதனால் மரபியல் அல்லது பிற நோய்கள் காளையிடமிருந்து பரவுவது தடுக்கப்படுகிறது.
தீமைகள்

பல நன்மைகள் இருப்பினும் இம்முறையில் சில குறைபாடுகளும் உள்ளன.
  1. இம்முறைக்கு அதிக ஆள் தேவைப்படுகிறது.
  2. மாடு சூட்டில் இருக்கிறதா என்பதை விவசாயிகள் சரியாக கவனிக்கவேண்டும்.
  3. விந்து சேகரிக்க தேர்வு செய்யப்படும் காளையும் நல்ல சந்ததி உற்பத்தி உள்ளதாக இருக்கவேண்டும். இல்லையெனில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.
  4. அதே போல் சேகரித்த விந்துவை சோதனைக்குப்பட்படுத்தி நோய்க்காரணிகளற்றதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
(ஆதாரம்: www.naweb.iaca.org)
செயற்கைக் கருவூட்டலின்போது கவனிக்க வேண்டியவை

பசுவில் ஊசி செலுத்துவதற்கு நன்கு பயிற்சி பெற்ற திறமையான நபர் வேண்டும். சினை ஊசி போடுபவர் சரியாக கருப்பையினுள் விந்தணுவை செலுத்தாவிட்டால் மாடு சினை பிடிக்காது. எனவே முறையான பயிற்சியின்றி செய்தால் அது பயனற்றதாகிவிடும்.
பழங்காலத்தில் பின்பற்றி வந்த செயற்கைக் கருவூட்டல் முறைகள் இயற்கை முறை போன்றே இருந்தன. இதற்கு நிறைய விந்துணுக்கள் தேவைப்பட்டன. எனவே சினைப் பை முறை முழுமையான பலன் தரவில்லை. பின்பு வந்த குடுவை முறையிலும் உபகரணங்கள் சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்காவிடில், சரியான பலன் கிட்டவில்லை. இறுதியில் இப்போது மலப்புழை வழியே சினைப்பையில செலுத்தும் முறையே நன்கு பயன் தருகிறது.
மலப்புழை வழியே சினைப்பைக்குள் செலுத்தும் முறை நன்கு சுத்தம்  செய்யப்பட்ட வடிகுழாயில் குளிர்விக்கப்பட்டு உறைநிலை குறைந்த விந்துக்களை வைத்து சினைப்பைக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தம்போது செலுத்துபவர் கண்டிப்பாக உறை அணிந்திருக்கவேண்டும். அவர் அந்த வடிகுழாயை கவனமாக உருண்டையான மடிப்புகள் வழியே எடுத்துச் சென்றபின், அக்குழாயானது கருப்பையின் கழுத்துப்பகுதியை அடைகிறது. விந்தணுக்களை கவனமாக வெளியேற்ற வேண்டும். சில விந்தணுக்கள் கருப்பையினுள்ளும் சில கழுத்துப்பகுதியிலும் விழுமாறு கவனமாக வெளியேற்ற வேண்டும். கருப்பையின் அளவு சிறியதாக இருப்பதால் உள்ளே அதிகம் செலுத்தி ஏதும் காயம் பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம். அதே சமயம் விந்துக்கள் வடிகுழாயிலேயே தங்கிவிடக்கூடாது. ஏற்கெனவே ஒரு முறை கருவூட்டல் செய்த மாடுகளுக்குச் சினைப் பிடிக்க சந்தர்ப்பம் இருப்பதால் வடிகுழாயை மிகவும் உட்செலுத்தக்கூடாது.
இம்முறை சிறிது கடினமாக இருந்தாலும் முறையாகப் பயிற்சி பெற்றபின் செய்வதானால் பிற முறைகளை விட அதிக பலன் தரக்கூடியது. அதே நேரம் சரியான சுகாதார முறைகளையும் மேற்கொள்ளவேண்டும்.
சினைப் பிடிக்க ஏற்ற நேரம்

கருவூட்டல் முறை வெற்றி வெற அடிப்படைக் காரணம் மாடுகள் சரியான சூட்டில் சினைக்குத் தயாராக உள்ளனவா என்று பார்த்துச் செய்வதே ஆகும். பல்வேறு ஆய்வுகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டிரிம் பெக்கர் மற்றும் டேவிஸ் என்பவர்கள் நெப்ராய்காவில் 1943ல் நடத்திய சோதனைப்படி அதிகமான பசுக்களுக்கு சினை பிடிப்பது மையச் சினைப்பருவத்தில் தான், ஏனெனில் பருவம் ஆரம்பித்து 8-10 மணி நேரத்தில் தான் சூலகத்திலிருந்து சூலகம் வெளிப்பட்டு முட்டைக்குழாயை வந்தடைகிறது. இதையே, காலையில் பருவத்திற்கு வரும் மாட்டை மாலையிலும் மாலையில் பருவத்திற்கு வரும் மாட்டை அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்வது நல்லது எனக்கூறுகிறோம். மேலும் மாட்டின் விந்தானது 18-24 மணி நேரம் கர்ப்பப்பையில் உயிருடன் இருக்கும்.
கருமுட்டை வெளியான பின்பு 12 மணி நேரம் கழித்து கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பு விகிதம் குறைந்துவிடும். 12-24 மணி நேரத்திற்குள் கருமுட்டையானது, கருவாக உருவாகும் தன்மையை இழந்து விடுகின்றது. எனவே குறிப்பிட்ட காலத்தில் கருவூட்டல் செய்தால் சினைப்பிடிப்பது அதிகரிக்கும்.
கருவூட்டல் செய்யும் நேர அட்டவணை
ஈஸ்ட்ரஸ் வெளிக் காட்டும் பசுக்கள்
கருவூட்டல் செய்ய வேண்டிய நேரம்
கருவூட்டல் செய்ய வேண்டிய நேரம்
காலையில்
அதே நாளில்
அடுத்த நாளில்
மாலையில்
அடுத்த நாள் காலையில் / முன்பகலுக்குள்
பின்பகல் 3 மணிக்கு மேல்
(ஆதாரம்: www.world_agriculture.com)

Read more...

பசு - நோய் மேலாண்மை

நோய் மேலாண்மை

பித்தப்பை நோய்


இந்நோய் அனப்பிளாஸ் மார்ஜிநேல், அனாபிபிளாஸ்மா சென்டிரேல் என்ற ஓரணு உயிரியால் மாடு மற்றும் எருமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள், பேன்கள் மூலம் பரவுகிறது. மேலும் ஊசிகள், கொம்பு நீக்கும் கருவிகள், ஆண்மை நீக்கம் செய்யும் கருவிகள், அடையாளக் குறியிடும் கருவிகள் மூலமும் பரவுகிறது. இந்த நுண்ணுயிரியானது இரத்தச் செல்களை அழிப்பதால் இரத்தசோகை, எடை குறைவு, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். அதோடு பாதிக்கப்பட்ட கால்நடையில் காய்ச்சல் அதிகமாகி பின்பு குறையும். பசியின்மை, மூக்கு காய்தல் மற்றும் மருத்துவம் செய்யாமல் அதிக நாட்களானால் மஞ்சள் காமாலை ஏற்படும். வயது முதிர்ந்த மாடுகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பண்ணையில் ஏதேனும் மாடு இந்நோயினால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பு நடவடிக்கையாக உண்ணிகள், பேன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முடிந்தவரை நோயின் ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சையளித்தல் சிறந்தது.

தடுப்பு முறை


சிடிசி எனப்படும் ‘குளோர்டெட்ராசைக்ளின்’ அனாப்பிளாஸ்மாசிஸைக் கட்டுப்படுத்துகிறது. இதை 0.5 மிகி / 16 உடல் எடைக்கு அளவு உட்கொள்ளச் செய்யலாம். கிருமி நாசினி மற்றும் பிற மருந்துகள் மூலம் உண்ணி,பேன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பாக்டீரியா கிருமியால் வரும் நோய்கள்

அடைப்பான் நோய்


இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது.  நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக்கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.
இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன. கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது. இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்துடன் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கு நோயையும் ஏற்படுத்துகின்றன.
நோய் அறிகுறிகள்
  1. இந்நோயால் மாடுகளில், திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்து விடும். இறந்தவுடன் மூக்கு, வாய், ஆசனம் போன்றவற்றிலிருந்து கருமை நிறமான இரத்தம் வெளியேறும்.
  2. காய்ச்சல் அதிக அளவு, 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  3. ஓரிரு நாட்களில் நோயின் வேகம் தணியும் போது காய்ச்சல் இருக்கும். மாடுகளில் உணர்வு இழப்பு ஏற்பட்டு பிறகு இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
    1. நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அடைப்பான் தடுப்பூசி போடவேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை.
    2. இந்நோயால் இறக்கும் முன்பு, இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது இறப்பரிசோதனையோ செய்யவோ கூடாது. காரணம் இக்கிருமிகளை வெளியில் காற்றுடன் கட்டுப்படுத்துவதும் கடினம். எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்தவேண்டும்.
    3. இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும். அந்த இடத்தை 3 சதம் பீனால் கரைசலைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தொண்டை அடைப்பான்

இந்நோய் பெரும்பாலும் மழைக்காலத்தில் குறிப்பாக நீர்ப்பாசனம், வெள்ளப்பெருக்கு மிகுதியாக உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகள், இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. தூரப்பயணத்திற்குப் பின்பும் அதிக நேரம் குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் இந்நோய் ஏற்படுகிறது. கலப்பினப் பசுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
நோய் அறிகுறிகள்
  1. கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
  2. கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.
  3. தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம் சூடாகவும், வலியோடு கூடியதாகவும் இருக்கும்.
  4. குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும்.
  5. நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.
  6. வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டிருக்கும். நாக்கு தடித்துக் கறுப்பாகி விடும்.
  7. மாடுகள் எதையும் விழுங்கவும், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. எல்லா மாடுகளுக்கும் மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே தடுப்பூசி போடவேண்டும்.
  2. நோயுற்ற மாடுகளை உடனடியாக மற்ற மாடுகளிடமிருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்து பாதுகாக்கவேண்டும்.
  3. பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நிலையில் ஏற்ற மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றி விடலாம்.
சப்பை நோய்

இந்நோய் வெப்பம் அதிகமாகவும் காற்றின் ஈரப்பதம் கூடுதலாகவும் உள்ள பகுதிகளிலுள்ள மாடுகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. இதுவும் ஓர் மழைக்கால நோயாகும். நல்ல ஆரோக்கியமான திடமான இளம் மாடுகளை 6 மாத வயது முதல் 3 ஆண்டு வயது வரை அதிகம் பாதிக்கிறது. இந்நோய் பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்
  • திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
  • தொடை அல்லது முன்கால் சப்பையிலோ அல்லது கழுத்து போன்ற சதைப்பிடிப்புள்ள பகுதிகளிலோ வெப்பம் மிகுதியாகவும் வலியோடு கூடியதும், கடினமான தன்மையுள்ள பெருத்த வீக்கம் காணப்படும். இதன் காரணமாக மாடுகள் நடக்க முடியாமல் நொண்டும்.
  • இதன் பிறகு வீக்கம் குறைந்து, வலியற்று, வீக்கத்திற்குள் காற்று இருப்பதாலும், விரல் கொண்டு அழுத்தும் போது நறநறவென்ற சத்தம் வரும். வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்திலுள்ள தோலின் நிறம் கருப்பாக இருக்கும்.
  • நோய்க் கண்ட 48 மணி நேரத்தில் உடனடியாக மருத்துவம் செய்யாமல் போனால், மாடுகள் இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. மழைக்காலத்திற்கு சுமார் 1 மாத்திற்கு முன்பே ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும்.
  2. நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் மாட்டைப்பிரித்துத் தனியாக ஒதுக்குப்புறமாக வைத்துக் கண்காணிக்கவேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடனடியாக மருத்துவம் செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மாட்டை உறுதியாகக் காப்பாற்றிவிடலாம்.
  3. சிகிச்சை அளிக்காவிட்டால் நோய்க்கண்ட மாடுகள் 5-7 நாட்களில் இறந்துவிடும். இறந்த மாடுகளைச் சுகாதார முறைப்படி அப்புறப்படுத்தவேண்டும். இறந்த இடத்தை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
கருச்சிதைவு நோய்

இந்நோய், பாக்டீரியா நுண்கிருமியால் ஏற்படுகிறது. இந்நோய், அதிக பால் தரும் கலப்பினப் பசுக்களில் அதிகம் பொருட் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோயால் கன்று வீச்சு, நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்திக் குறைவு போன்ற பல் காரணங்களால் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் நோயுற்ற மாட்டின் நஞ்சுக் கொடி, இரத்தப் போக்கு போன்றவற்றை தொட்டு சுத்தம் செய்வத மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவுகிறது. பாலை நன்கு கொதிக்க  வைத்தபின் பருகவேண்டும்.
நோய் அறிகுறிகள்
  1. இந்நோய் காரணமாகச் சினை மாடுகளில் கருப்பையில் நோய் ஏற்பட்டு, கருத்தரித்த 5 முதல் 8 மாத காலம் வரையிலும் கன்ற வீச்சு ஏற்படும்.
  2. கன்று வீச்சு ஏற்பட்டபின் நஞ்சுக் கொடி கருப்பையில் இருந்து வெளி வராமல் தங்கி விடும்.
  3. பசுவின் அறை அல்லது பெண் பிறப்புறுப்பிலிருந்து சீழ் போன்ற திரவம் வடியும்.
  4. கருச்சிதைவுற்ற மாடுகள் சினைக்கு வர கால தாமதம் ஆகும். சினை பிடிக்காது.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளை இரத்தப் பரிசோதனை செய்து இந்நோய் இருப்பின், பண்ணையிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும்.
  2. மாடுகளைப் புதிதாக வாங்கும் பொது இரத்தப் பரிசோதனை செய்த பிறகே வாங்கவேண்டும்.
  3. நோயுற்ற மாடுகளைக் கொட்டகையில் இருந்து அகற்றிவிடவேண்டும்.
  4. இறந்த கன்று, நஞ்சு, இரத்தம் போன்றவற்றை மிகவம் சுகாதாரமுடன் அப்புறப்படுத்தவேண்டும். பயன்படுத்தப்பட்ட வைக்கோல் போன்ற பொருட்களை எரித்துவிடவேண்டும்.
  5. நஞ்சுக் கொடியை அகற்றும் போது கைக்கு உறை அணியவேண்டும். தேவையான சுகாதார முறைகளைப் பின்பற்றவேண்டும்.
  6. கன்று வீசியவுடன் வாலின் நுனிப்பகுதியில் கர்ப்பப் பையிலிருந்து வெளியேறம் இரத்தம் தங்கி மாடு வாலை வீசும் போது, பக்கத்திலுள்ள தண்ணிர், தீவனத் தொட்டி மற்றும் மாட்டின் கண், வாய், மூக்கில் பட்டு நோய் பரவ நேரும். கன்று வீசிய மாட்டை உடனே தனியாக வைத்துப் பராமரிக்கவேண்டும்.
  7. நோயுற்ற பசுக்கைள இனவிருத்திக்கு அனுமதிக்கக்கூடாது.
  8. எல்லாக் கிடேரிக் கன்றுகளுக்கும் 6-9 மாத வயதில் இந்நோய் வராமல் தடக்க தடுப்பூசி போடவேண்டும்.
வயிறு உப்புசம்:

கறவை மாடுகளின் முன்வயிற்றில் உணவு சேமித்து வைக்குமிடத்தில் மீத்தேன், கார்பன்டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் அடைத்துக் கொள்ளும். இதனால் விலங்குகள் போன்ற திரும்ப உணவை வாய்க்கு எடுத்து அரைக்க முடியாமல் அவதிப்படும். இது ஒரு நுரைபோல் முன்வயிற்றில் கட்டிக்கொள்வதால் உணவைச் செரிக்க இயலாது. பயறு வகை போன்ற சில கால்நடைகளுக்கு ஒவ்வாத பயிர்களை மேய்ச்சலின் போது உண்டு விடுகின்றன. இந்தப் பயிர்களில் உள்ள சில வகைப் புரதங்கள் மேற்கண்ட வாயுக்களை உற்பத்தி செய்கின்றன. ஆல்·பால்பா, சிவப்பு குளோவர் போன்றவை தீவனங்களில் அதிகம் கலக்கமால் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்நோய் பாதித்த கால்நடைகள் காலை அடிக்கடித் தரையில் உதைக்கும். குழப்பத்துடன் காணப்படும்.
கன்று வீச்சுநோய்

இந்நோய் ஐ.பி.ஆர் என்ற நச்சுயிரி (வைரஸ்) நுண்கிருமியால் ஏற்படும் நோயாகும். இந்நோய்க் கிருமி கருவுற்ற கறவை மாட்டின் கர்பப்பையைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்துகிறது. பொதுவாக 4-7 மாத வயதுள்ள கருவைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும் தன்மையுடையது. கருச்சிதைவிற்குப் பின் கருத்தரியாமையை ஏற்படுத்துகிறது. இதனால் அதிக பொருளாதாரச் சேதம் ஏற்படுகிறது. இந்நோய்க் கிருமி விந்து மூலமாக கறவை மாட்டிற்கு பரவுகிறது. காளையில் இந்நோயிருப்பின் கறவை மாட்டிற்கு பரவுகிறது. இது மட்டுமல்லாமல், மாடு ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதாலும் இந்நோய் பரவுகிறது. தண்ணீர், தீவனம், காற்று மூலமாகவும் பரவுகிறது. உறை விந்து மூலமாக அதிக அளவு பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
நோய் அறிகுறிகள்
  1. திடீரென்று 3-7 மாத சினைக் காலத்தில் கருச்சிதைவு ஏற்படும்.
  2. கண் மற்றும் நாசித்துவாரம் வழியாக நீர் போன்ற திரவம் வழியும். அதில் இந்நோய்க்கிருமிகள் அதிக அளவு இருக்கும்.
  3. கன்று இறந்து பிறக்கும். நஞ்சுக் கொடி தங்கிவிடும்.
  4. இத்துடன் மூச்சுத் திணறல், மடிநோய், மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, உணவுக் குழல் பாதிக்கப்பட்டு வயிற்றுப் போக்கு போன்ற நோய் அறிகுறிகளும் தென்படும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. நோய் வராமல் இருக்க கறவைமாடுகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.
  2. இரத்தப் பரிசோதனை செய்து, நோயுள்ள பொலிகாளைகளையும், கறவை மாடுகளையும் பண்ணையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  3. பாதிக்கப்பட்ட மாடுகளில் நோய்க் கிருமி தங்கி, அவ்வப்போது வெளியேறி நோயைப் பரப்புவதால் இத்தகைய மாடுகளைப் பண்ணையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
  4. சுற்றுப்புறச் சுகாதாரம் பராமரிப்பு மேம்பாடு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
4.பிஎஸ்சி (அ) மாட்டு பித்த நோய்

இது ‘பொவைன் ஸ்பாஞ்சியோஸ்பெர்ம் என்செப்பலோ பதி’ (பிஎஸ்இ) அல்லது ‘மாட்டு பித்த நோய்’ எனப்படும். இது மூளையைப் பாதித்து நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இது மனிதனின் நரம்பியலோடு தொடர்புடைய சிஜேடி எனும் நோயைப் போன்றதாகும். இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு, இதுவரை ஏதும் மருந்து அறியப்படவில்லை. இந்நோய் பாதித்த பின்பு அதன் அறிகுறிகள் தெரிவதற்கு 2-8 வருடங்கள் ஆகலாம். நடுக்கம், அசாதாரணத் தோற்றம், பழக்கம் மற்றும் வளர்ச்சியற்ற நிலை போன்றவை இதன் அறிகுறிகள். இது முதலில் ரேபீஸ் நோய் போன்ற தோன்றலாம். இந்நோய் பாதித்த கால்நடைகளை அழிப்பதே நல்லது.

இறந்த கால்நடைகளின் மூளை செல்களை மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து மட்டுமே இந்நோயை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உயிருடன் உள்ள கால்நடையில் பரிசோதனை செய்ய இயலாது.
 பிவிடி

இது பொவைன் வைரஸ் ‘டையேரியா நோய்’ எனப்படுகிறது. இந்நோய் செரிமானத்தையும், நோய் எதிர்ப்புப் பகுதி, நிமோனியா கருச்சிதைவு, கன்றுக் கோளாறு போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. பிறந்த கன்றுகளில் இந்த நோயின் தாக்கமானது மூக்குச் சீரம் வெளிவருதல், வயிற்றுப் போக்கு மற்றும் சரியாக நடக்க முடியாத தன்மை போன்ற அறிகுறிகளால் அறியப்படுகிறது.
சரியான வைரஸ் தடுப்பூசி இழப்பைத் தவிர்க்க உதவுகிறது. எம்எல்வி - பிவிடி தடுப்பூசியை கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்தல் நலம்.
கன்றுக் கழிச்சல் நோய்

இந்நோய், இளங்கன்றுகளைத் தாக்கி அதிக அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய் கோலிபார்ம் என்ற கிருமியால் ஏற்படுகிறது. குடற்பகுதியிலுள்ள மற்ற பாக்டீரியா நுண்கிருமிக்ள இவற்றுடன் சேர்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கன்று ஈன்ற ஓரிரு வாரங்களில் இந்நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். சீம்பால் கொடுக்கப்பட வில்லையெனில் கன்ற கழிச்சல் அதிகமாக ஏற்படும். அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.
நோய் அறிகுறிகள்
  1. வெள்ளை நிறத்தில் வயிற்றுப் போக்கு தொடர்ந்து இருக்கும்.
  2. கன்றுகள் மெலிந்து காணப்படும்.
  3. நோய்க் கண்ட ஒரு வாரத்தில் கன்று இறந்துவிடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. கன்று பிறந்தவுடன் மடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு சீம்பால் அருந்த விடவேண்டும். அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக அருந்த அனுமதிக்கவேண்டும்.
  2. உடல் எடையில் 10 சதம் பசும்பால் கொடுக்கவேண்டும். இதில் 10 விழுக்காடு சீம்பாலாகத் தரலாம்.
  3. தண்ணீர் மற்றும் திவனத் தொட்டி மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.
  4. தரை எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  5. முதல் இரண்டு வாரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் கொடுப்பது நல்லது. இல்லையேல் குளோரின் கலந்த தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.
  6. நோயுற்ற கன்றுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கவேண்டும்.
கண் புற்றுநோய்

இது கண் புருவம், கருமணி ஆகியவற்றில் கட்டி போன்று ஏற்படுகிறது. உடலின் மற்ற பாகங்களுக்கு இந்நோய் பரவுவதில்லை. எனினும், கண்ணைச் சுற்றிலும் புரை போல் வரும்.

இது நிறமிகளற்ற தோலில் மட்டுமே பாதிப்பு எற்படுத்தும். எனவே தான் கண்ணைச் சுற்றிலும் கட்டி உருவாகிறது. அதனால் இனங்களைத் தெரிவு செய்து வாங்கும் போதே கண் நன்கு கருப்பாக உள்ள கால்நடைகளைத் தேர்ந்து வாங்குதல் நலம். மேலும் மந்தையிலிருந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளையும் அதன் கன்றுகளையும் அகற்றுதல் நன்று. கண் புற்று நோய் 7-8 வருட வயதுடைய கால்நடைகளைத் தாக்குகிறது. 3 வயதுக்கும் குறைவான கால்நடைகளை இது அவ்வளவாகத்  தாக்குவதில்லை.
கால்நடைகளின் கண்களை அவ்வப்போது சோதித்துக் கொள்ளவேண்டும். அறுவை சிகிச்சை, போன்ற சிகிச்சைகள் மூலம் ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். கால்நடைகளின் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிகிச்சை மேற்கொள்வதை விட மந்தையிலிருந்து நீக்குவதே நல்லது.நோய் அதிகமான மாடுகளை சந்தைக்கு எடுத்துச் செல்லக்கூடாது. பெரிதான கட்டிக்கல் மற்ற பாகங்களுக்கும் பரவக்கூடும். எனவே கவனமாகக் கையாளுதல் நன்று.
இரத்தக் கழிச்சல் நோய்

இந்நோய் மிகச்சிறிய ஒரு செல் உயிரிகளால் தாக்கப்படுகிறது. இது ஒரு கன்றிலிருந்து 2 வருட வயது வரை உள்ள கன்றை அதிகம் தாக்குகிறது. மற்ற மாடுகளும் பெரிய மேய்ச்சல் நிலங்களில் மேயும் போது பாதிக்கப்படலாம்.
வயிற்றுப் போக்கு, வறண்ட இருமல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மாடு தன் வால் மூலம் பின்புறத்தை அடிக்கடி அடித்துக்கொள்ளும். இது உடலின் எபிதீலியல் செல்களை அழித்துவிடுகிறது.
பல உயிரிகள் வயிற்றில் பெருகிவிடுகின்றன. நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட கால்நடை இறந்து விடலாம்.
மேய்ச்சல் நிலங்களில் ஈரம் அதிகமாக இருந்தால் இந்நொய் எளிதில் பரவும். எனவே மேய்ச்சல் நிலங்களை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர்த் தொட்டி தரையிலிருந்து சற்று உயரத்தில் இருக்கவேண்டும். சதைப்பற்றுள்ள பயிர்களை ஓரங்களில் வளர்க்கலாம்.

காக்சிடியோஸ்டேட் என்ற மருந்தைத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். நல்ல தீவனம் உண்ணும் கால்நடைகளை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.
கோமாரி நோய்

‘கால்கானை வாய்க்கானை’ என்றும், ‘கால் சப்பை வாய்ச் சப்பை’ என்றும் இந்நோய்க்கு வேறு பெயர்களும் உண்டு. இவ்வைரஸ், தட்பவெப்ப நிலையைத் தாங்கி அதிக நாள் உயிருடன் வாழும் தன்மை உடையது. இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள் 4 வகைகள் நம் நாட்டில் உள்ளன. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. இதனால் இந்நோயைத் தடுக்க, தகுந்த தடுப்பூசி மருந்து இல்லை. தற்போதுள்ள தடுப்பூசி மருந்து முழு நோய் எதிர்ப்புத் திறனை அளிப்பதில்லை. நோய் எதிர்ப்புத் திறன் காலமும் நான்கு மாதம் தான். எனவே, நான்கு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடவேண்டும்.
உயிர் இழப்பு இல்லையென்றாலும் இந்நோயினால் பாதிப்பு அதிகம். பாதிக்கப்பட்ட மாடுகளின் பொருளாதாரக் குணங்கள் பாதிக்கப்படுவதால் மாடுகள் பயனற்றுப் போகின்றன. இந்நோய், தீவனம், நீர், காற்று, நெருங்கிப் பழகுவதாலும் பரவுகிறது. காற்று வீசும் திசையில் காற்றுத் துகள்கள் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவும்.
நோய் அறிகுறிகள்
  1. பொதுவாகக் கோடைக்காலத்தில் இந்நோய் அதிகம் பரவுகிறது. ஆரம்பத்தில் காய்ச்சல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
  2. வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கெட்டியான உமிழ்நீர், கயிறு போன்று தொங்கிக் கொண்டிருக்கும். நோய் கண்ட மாடுகள், தொடர்ந்து வாயைச் சப்பிய வண்ணம் காணப்படும்.
  3. வாயைத் திறந்து பார்த்தால் நாக்கின் மேல்புறம், மேலண்ணம், வாயின் உட்பகுதி முதலியவற்றில் மெல்லிய, நீர் கோர்த்த கொப்பளங்கள் காணப்படும். ஓரிரு நாட்களில் ஆங்காங்கே கொப்பளங்கள் தொங்கிய வண்ணம் இருக்கும். இதனால் தீவனம் உட்கொள்ள முடியாது.
  4. கால்களில் குளம்புகளுக்கிடையே உள்ள தோலிலும், குளம்புகளுக்குச் சற்று மேற்புறமுள்ள தோலிலும் புண்கள் உண்டாகும். வலி காரணமாக மாடுகள் அடியெடுத்து வைக்க அஞ்சும். குளம்புகள் நாளடைவில் கழன்று விழ நேரிடலாம்.
  5. நோய் கண்ட பசுக்களில் பால் அருந்தும் கன்றுகள் இறந்துபோகும்.
  6. மடி, காம்பு போன்றவற்றில் கொப்பளம் தோன்றி பின்பு புண் ஏற்பட்டு, பால் கறக்க இயலாது. மடிநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
தடுப்பும் பாதுகாப்பும்
    • கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் கோமாரி நோய்த் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் பின்பு 4 மாதத்திற்கு ஒரு முறை கோமாரி நோய்த்தடுப்பூசியையும் தவறாமல் போட வேண்டும். நோய் ஏற்படும் காலத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்பூசி போடவேண்டும்.
    • பால் கறப்பவர், வெளியிலிருந்து வருபவராக இருந்தால் அவர் மூலம் இந்நோய் பண்ணைக்குள் வர வாய்ப்புள்ளது.
    • மற்ற மாடுகள், பண்ணைக்கு உள்ளே எந்தக் காரணம் கொண்டும் வரக்கூடாது. அதே போல், பண்ணை மாடுகள் வெளியில் செல்லக்கூடாது. பார்வையாளர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே வரக்கூடாது. இதை நன்கு கண்காணிக்க வேண்டும்.
    • சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைக்ட்ராக்சைடு கிருமி நாசினி மருந்தை 3-4 சதம் கரைசலாக்கி தரையில் தெளிக்கவேண்டும். சோடியம் கார்பனேட் பவுடரை தரையில் தூவலாம். பீளீச்சிங் பவுடரை தரையில் தூவி கிருமியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
    • நோய் ஏற்பட்டால் நோயுற்ற மாடுகளை ஒதுக்குப்புறமாக வைத்து சிகிச்கையளிக்கவேண்டும். பாதிக்காத மாடுகளோடு தொடர்பு இருக்கக்கூடாது.
    • நோயுற்ற மாட்டின் பாலை, கன்றுகள் அருந்த அனுமதிக்கூடாது.
    • இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
    • நோய்க்கிருமி தொழுவத்தில் அதிக நாள் உயிருடன் இருக்கும் திறன் கொண்டமையால், கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
    • நோய்ப்பரவியுள்ள சமயத்தில், மாடுகளை சந்தையில் வாங்கவோ, விற்கவோ கொண்டு செல்லக்கூடாது.

குளம்பு சிதைவு நோய்


ஃபுளுசோபாக்டீரியம் நெக்ரோபோரம், பாக்டீரியாய்டஸ் மெலனினோஜெனிகாய்
என்ற பாக்டீரியாக்கள் மூலமே இந்நோய் பரவுகிறது. இது எல்லா வயது கால்நடைகளையும் பாதித்தாலும், வயது முதிர்ந்த மாடுகளில் பாதிப்பு அதிகம். குளிர் கோடை காலங்களில் இது அதிகம் பரவுகிறது.
காலில் உள்ள ஏதேனும் புரை / புண்கள் மூலம் பாக்டீரியாக்கள் நுழைந்து விடுகின்றது. ஆரோக்கியமான நோயில் இது உட்புகுவதில்லை. எனவே குளம்புகளை அவ்வப்போது கவனித்து வெட்டிவிடவேண்டும். இது ஈரமான சாணம், சேற்றில் நன்கு தங்கி வளரும் இயல்புடையது.
திடீரென கால் முடங்கிவிடும். ஒரு கால் மட்டுமே பாதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கால் சிறிது எடை அதிகரிக்கும். 103-105 டிகிரி பாரன்ஹீட் கொண்ட சாதாரணக் காய்ச்சல் ஏற்படுகிறது. சரியாக மூடப்படாத கால் இடுக்குகள், குளம்புப் பள்ளங்கள் வழியே பாக்டீரியா உட்புகுகிறது.
சரியான சிகிச்சை அளிக்காவிடில் கால் முடக்கம் பல வாரங்கள் வரை நீடிக்கும். பென்சிலின், டெட்ராசைக்ளின், சோடியம் சல்ஃபோடிமிடின் போன்ற கிருமி நீக்கிகள் பயன்படுத்தலாம். ஜிங்க் ஊட்டம் நல்ல பலனைத்  தரும். சிகிச்சையளித்த கால்நடைகள் முற்றிலும் குணமாகும் வரை உலர்ந்த தரையிலேயே இருக்கவேண்டும். 0.5 மிமி /16உடல்எடை அளவு குளோரோ டெட்ராசைக்ளின் பாத அழுகல் நோயைப் போக்கும்.
புல் வலிப்பு நோய்

கால்நடையின் இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இது ஓர் உயிர்க்கொல்லி நோயாகும். இது ‘கோதுமைப் புற்கள்’ நோய் எனவும் அழைக்கப்படுகிறது. இது இளங்கன்றுகளின் பால் ஊட்டத்தைக் குறைக்கிறது. எல்லா வயது மாடுகளையும் இது தாக்குகிறது. சதைப்பற்றுள்ள. வளர்ச்சியடையாத புற்களை மேய்வதால் இந்நோய் ஏற்படுகிறது.
பொட்டாசியம் மற்றும் அலுமினியம் அதிகம் உள்ள மண்ணில் நிறைய நைட்ரஜன் உரங்கள் இடுவதால் மெக்னீசியத்தின் தேவையைக் குறைக்கலாம். வசந்த மற்றும் குளிர்க்காலங்களில் இது அதிகம் பரவுகிறது. இது கவனிக்காமல் விட்டால் கோமா, இறப்பு போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது. எதிர்ப்புச் சக்தி வாய்ந்த மாடுகளை இது போன்ற புல்வளர்ந்த இடங்களில் மேய விடலாம். 4 மாதத்திற்கும் குறைவான வயதுடையவை நோயைத் தாங்கும் சக்தியற்றவை. மேய்ச்சல் நிலங்களில் டோலமைட், அதிக மெக்னீசியம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த உரங்களை இடவேண்டும்.  கால்நடைத் தீவனத்திலும் எல்லாச் சத்துக்களும் சரிவிகிதமாக இருக்குமாறு தரவேண்டும்.
சிவப்பு மூக்கு (IBR)

பொவைன் ரினேடிரேச்செய்புஸ் தொற்று என்று அழைக்கப்படும் இந்நோய் வைரஸால் தோற்றுவிக்கப்படுகிறது. இது தலையில் வாயுக்களை உருவாக்குகிறது. மேலும் பசு மாடுகளின் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். தடுப்பூசி கொடுக்கப்படாவிட்டால், இந்நோய் தாக்கிய கால்நடைகளைக் காப்பாற்றுவது கடினம். நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியைச் சினை மாடுகளுக்குக் கொடுத்தல் அவசியம். கலப்பிற்கு 30-60 நாட்கள் முன்பு இளம்பசுக்களுக்குத் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
ஐபிஆர், பிஐ3, பிவிடி போன்ற பல கலவை தடுப்பூசிகள் உள்ளன.
வெளிப்புற ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள்

உண்ணி, பேன், தெள்ளுப்பூச்சி, சொறிப்பூச்சி, ஈக்கள், கொசு முதலியவற்றால் மாடுகள் பெரிதும் தொல்லைக்கு உட்படுவதோடு, இரத்த இழப்பால் நலிவடைகின்றன. உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய உண்ணிகள் சில கொள்ளி நோய்களைப் பரப்பவும் உதவுகின்றன.
சிறு ஈக்கள்

இவை வீட்டு ஈக்களைவிட மிகச்சிறியவை. சாம்பல் நிறம் கொண்டவை. இவ்வகை ஈக்கள் தோள் மற்றும் பின் பகுதியில் ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும். ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் மாட்டை விட்டு சிறிது பறந்து, பின் மீண்டும் மாட்டிடமே வந்து ஒட்டிக் கொள்ளும். இவை முட்டையிடுவதற்கு மட்டுமே ஈரமான சாணங்ளைத் தேடி செல்லும். மற்ற நேரங்களில் மாட்டின் மேல் அமர்ந்து அதன் நுண்ணிய நீண்ட வாய்ப்பகுதியில 20-30 இடங்களில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதால் விலங்குகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டிருப்பதோடு மிகுந்த இரத்த இழப்பு ஏற்படும்.
முக ஈக்கள்

வீட்டு ஈக்கள் போலவே இருக்கும் . இவை கூட்டமாக மாட்டின் முகத்தின் மேல் அமர்ந்து கொண்டு கண், வாய், உதடுகளில் சுரக்கும் திரவங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும். இவை இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. ஆனால் வெளிர் சிவப்புக் கண் நோயைப் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைப் பரப்புகிறது. இந்த ஈக்களைக் கட்டுப்படுத்துவது கடினம்.
மாட்டு ஈக்கள்

இவை அளவில் வீட்டு ஈக்களை விடப் பெரியவை. கடிக்கும் வீட்டு ஈக்கள் எனவும் இவைகள் அழைக்கப்படுகின்றன. இது கால் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது. கூர்மையான வாய்ப்பகுதி கொண்டு இதன் வயிற்றில் இரத்தத்தை நிரப்பிக் கொண்டு, நிழலான இடங்களில் சென்று இரத்தத்தை செரிக்கச் செய்யும். இதில் இரத்தக் குழம்பு அதிகமாக இருக்கும்.
உண்ணிகள்
இவை இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சும் எனவே மாடுகள் ஓய்வின்றி இருக்கும். உண்ணியைக் கட்டுப்படுத்துதல் மிகவும் கடினம். அதிக அளவு உண்ணிகள் பெருகிவிடின் தடுப்பு முறைகள் பலன் தராது. இது அதிகமாக மேய்ச்சல் பகுதிகளில் காணப்படும். மாட்டின் மேல் மற்றும் தொழுவத்தில் உள்ள உண்ணிகளை இராசயன மருந்துகள் தெளித்துச் சரி செய்யலாம் அல்லது கால்நடைகளை மருந்தில் நனைத்தும், காது அடையாளக்குறிகளை சுத்தம் செய்தும் தூசிகளைச் சுத்தம் செய்தும் பரவலைத் தவிர்க்கலாம்.
பேன்கள்

தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுகிறது. காதுகளைச் சுற்றி அதிகமாகக்  காணப்படும். இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து வளர்ச்சியற்று இருக்கும். இது குளிர் காலங்களில் வழக்கத்தை விட அதிகமாகப் பெருகும். எனவே குளிர் காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க, மருந்து நடவடிக்கைகளைச் செய்யவேண்டும். 3 வாரங்கள் தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லையெனில் சில முட்டைகள் சாகாது. தெளிப்பு முறை (அ) விலங்குகளின் முதுகில் ஊற்றுவதன் மூலம் மருந்து கொடுக்கலாம்.
தெள்ளுப்பூச்சி

இது தோல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. இது தொடர்பு மூலம் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும். இவை குழியில் மறைந்து கொள்ளுவதால், கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். பேன் கட்டுப்பாட்டு முறை போல இதிலும் 2 (அ) 3 முறை பயன்படுத்தவேண்டும்.
உட்புற ஒட்டுண்ணி நோய்கள்

ஜோனீஸ் கழிச்சல் நோய்


இது ‘யோநீஸ் நோய்’ என்றும் ‘பாராடியூபர்குளோசிஸ் நோய்’ எனவும் அழைக்கப்படுகிறது. இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளாசிஸ் என்னும் பாக்டீரியவினால் வயதான மாடுகள், ஆடுகள், மான், காட்டெருமை மற்றும் சில விலங்களுகளில் தோற்றுவிக்கப்படுகிறது.
இந்த ஜான்ஸ் நோயானது இளம் கள்றுகளிலேயே தோன்றிவிட்டாலும் அதன் உணவு செரிமானக் குழலில் தங்கிவிடுகிறது. இதன் அறிகுறிகள் 2-5 வயது ஆன மாடுகளிடமே வெளிப்படும். அதிக எடையிழப்பு, வயிற்றுப்போக்கு, பால் அளவு குறைவு போன்றவை இதன் அறிகுறிகள் பாதிக்கப்பட்ட கால்நடை நிறைய தீவனம் எடுக்கும். நல்ல தோற்றத்துடன் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இந்நோய் தாக்கினால் பின்பு குணப்படுத்த இயலாது.
இதை ஆரம்பத்திலேயே கண்டுணர முடியாததால் சிகிச்சையளிக்க முடியாது. நல்ல கால்நடை மருத்துவர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மாடுகளை மந்தையிலிருந்து அகற்றி பிற மாடுகளுக்குப் பரவாமல் தடுக்கலாம். இது பொதுவாக அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறது.
லெப்டோநோய்

இந்நோய் லெப்டோஸ்பைரா பொமோனா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. சினை மாடுகளில் இந்நோயால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுகிறது. மஞ்சள் நிறத் திரவமும், இரத்தம் கலந்த சிறுநீரும் இதன் அறிகுறிகள் ஆனால் இது அவ்வப்போது மட்டுமே வெளிப்படும். இந்நோய் பாதித்த மாட்டின் பால் கெட்டியாகவும், இரத்தத் துளி கலந்தது போல் இருக்கும். பாதிக்கப்பட்ட 2 வாரங்களில் 7 மாத வயதில் கருச்சிதைவு ஏற்படுகிறது. இரத்தப் பரிசோதனை மூலம் இந்நோய் இருப்பதை அறியலாம்.
சினைப் பருவத்திற்கு 30-60 நாட்கள் முன்பு தடுப்பூசி போடுதல் வேண்டும். ்விப்ரியோசிஸ்் தடுப்பூசிகள் இந்நோய்க்கு சிறந்த தடுப்பான்.
கழல் நோய்

இந்நோய் கண்ட மாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். கருச்சிதைவு 7-9 மாதத்தில் நிகழும். நஞ்சுக் கொடி எளிதில் விழாது. இது லிஸ்டிரியா மோனோசைட்டோஜீன்ஸ் என்னும் பாக்டீரியத்தினால் ஏற்படுகிறது. இந்த உயிரி மண், சாணம், புல் போன்ற எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த உயிரி மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. கால்நடை மட்டுமின்றி ஆடுகள், பன்றி, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளிலும் ஏற்படுகிறது. அமைதியின்மை பசியின்மை, மிகுந்த காய்ச்சல் போன்றவை சுற்றிச்சுற்றி வருவதால் இது ‘சுற்று நோய்் எனப்படுகிறது. அறிகுறிகள் தெரிந்த 2-3 நாட்களுக்குப்பின் பாதிக்கப்பட்ட விலங்கு இறந்து விடும். கால்நடையாயின் 2 வாரங்கள் வரை உயிர் வாழும்.
கொட்டகைகளில் மாடுகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். செலேஜ் (பதப்படுத்தப்பட்ட) தீவனம் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும். நல்ல எதிர்ப்புச் சக்தி உள்ள ஆரோக்கியமான மாடுகள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் குணப்படுத்தவேண்டும்.
தொடை வீக்க நோய் (Lumpy Jaw)

இந்நோய் ஏக்டினோமைசில் போவிஸ் என்ற உயிரியால் பரவுகிறது. இது பெரிய நகர்த்த முடியாத அளவு கட்டியை மாடுகளின் தொடையில் உருவாக்குகிறது. செம்புல் போன்ற புற்கள் உண்ணும் போது, அவை மாடுகளின் வாய் ஓரங்களில் சிறிது கிழித்துவிடுகிறது. இந்த இடுக்கு வழியே இவ்வுயிரி புகுந்து விடுகிறது. இந்தக் கட்டி பெரிதாகி தெரியுமளவு வர சில மாதங்களாகும். இதற்குள் இது சற்று முதிர்ந்து விடும். இந்தக் கட்டியில் மஞ்சள் நிற சீழ் போன்ற திரவம் எலும்பு இடுக்குகளில் தேங்கும். கவனிக்காவிடில் கட்டி பெரிதாகி உடைந்து அதிலிருந்து மஞ்சள் நிற சீழ் வெளிவர ஆரம்பித்துவிடும்.
நாசி எலும்புகளை பாதிப்பதால் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும். மெல்வதற்குக் கடினமாக இருப்பதால் மாடு உணவு உட்கொள்ளாது.
இதற்குப் பயன்படுத்தப்படுவது அயோடின் முறை «øÄР  டெட்ராசைக்ளின். கட்டி ஏற்பட்டால் உடனே கால்நடை நல்ல நிலையிலிருந்தாலும் உடனே மந்தையிலிருந்து அகற்றி, தனியே வைத்து சிகிச்சை அளிக்கவேண்டும். இல்லையெனில், கட்டி உடலின் பிற பாகங்களுக்குப் பரவ ஆரம்பித்து விடும்.
வெளிர் சிவப்புக் கண்

பெயருக்கேற்றார் போல் இந்நோய் பாதித்த மாடுகளின் கண்கள் வெளிர் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இது உயிர்க்கொல்லி நோய் இல்லாவிடிலும் பாதிப்பு பொருளாதார ரீதியில் அதிகம்.
கண் விழியின் கார்னியா திரை மூடப்படுவதாலும், நிறைய நீர்  கண்களிலிருந்து வடிவதாலும் கண்ணைத் திறக்க முடியாமல் மூடிக்கொள்ளும். ஒரு கண்ணோ «øÄР  இரண்டுமோ பாதிக்கப்படலாம். கார்னியாவின் நடுவே வட்டவடிவமான அரிக்கப்ப்டட் பகுதி உருவாவதால் எரிச்சல் இருக்கும். கண் மூடிக்கொள்வதால் சரியான தீவனமன்றி எடை குறையும். 4-8 வாரங்கள் அல்லது அதற்கு மேலும் இந்நிலை நீடிக்கும் சரியான சிகிச்சையளித்துக் குணமடைய ஆரம்பித்தால் இதில் உருவான வெளிறிய பகுதி மறைந்து விடும். பாதிப்பு அதிகமானால் இவ்வெளிர்நிறம் சரியாகக் குணமடையாமல் அடிக்கடி பார்வையைத் தொந்தரவு செய்யும். மேலும் பாதிப்பு அதிகரித்து நோய் எல்லா கார்னியாவின் எல்லா அடுக்குகளையும் பாதித்தால் கருவிழிறைச் சுற்றியுள்ள திரவம் வற்றிவிடும். இது  நிரந்தர பார்வை இழப்புக்குக் காரணமாகும்.
  • இந்நோய் பல வகைகளில் பரவுவதால் நல்ல தடுப்பு முறை அவசியம். ஈக்கள் மற்றும் கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். காதைச் சூழ்ந்த உறைகள் பிளாஸ்டிக் உறை போன்றவை அணிவிக்கலாம். பொடித்தூவுதல், மருந்து தெளித்தல் மூலமாகவும் இவைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • மேய்ச்சலின் போது உயர வளர்ந்த புற்கள், விதைகள் மாடுகளின் கண்களில் பட்டு எரிச்சல் அடையச் செய்யும். எனவே புற்களை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும்.
  • சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் காலநடைக்கன்றுகளை பாதிக்கலாம். எனவே எப்போதும் நிழலில் வளர்ப்பதே சிறந்தது.
  • சரியான மருந்து கிருமி நாசினியை அவ்வப்போது அளித்தல் நல்ல பலனைக் கொடுக்கும்.
படர் தாமரை

தொடர்பினால் பரவக்கூடிய இந்நோய், டிரைக்கோஃபைட்டான் வெருகோசம் என்னும் ஸ்போர் உண்டாக்கும் பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படுகிறது. இது மனிதர்களையும் தாக்குகிறது. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது. இப்பூஞ்சையின் ஸ்போர்கள் முளைத்து கால்நடையின் தோல், முடி போன்றவற்றை பாதிக்கிறது. பாதித்த பகுதியிலிருந்து சாறு போன்ற திரவம் வெளிவந்து தோல் பகுதியோடு சேர்ந்து புண்ணை உண்டாக்குகிறது. தோலைச்சுற்றிலும் வெளிச்சாம்பல் நிறம் தோன்றும். தலை மற்றும் கழுத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. இது முடியற்ற ஒரு வட்டவடிவ வெண்சாம்பல் நிறத்தில் பல அறிகுறியை உடல் முழுதும் ஏற்படுத்துகிறது.
இந்த படர் தாமரை நோய் தானாகவே சரிசெய்யக்கூடியது, அல்லது 2 சதவிகிதம் தைபெண்டலோஸ் பசைக்கரைசலை, உபயோகித்துக் குணப்படுத்தலாம்.
டிரிகோமோனியாசிஸ்

டிரிக்கோமோனாஸ் ஃபீட்டஸ்
என்னும் புரோட்டோசோவாவினால் தோற்றுவிக்கப்படும் இந்நோய், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது மாடு மற்றும் காளையின் இனப்பெருக்க உறுப்பில் மட்டுமே காணப்படுகிறது. இந்த உயிரியானது காளையிடமிருந்து பசுவின் யோனிக்குழாயை அடைந்து பின்பு கருப்பைக்கு இடம் பெயர்கிறது. பாதிப்பு ஆரம்பித்தவுடன் ஒரு வெள்ளை நிறத் திரவம் பசுவின் இனப்பெருக்கப் (கன்று ஈனும்) பகுதியிலிருந்து வடிகிறது. 90 சதவிகிதம் மாடுகளுக்கு எளிதில் பரவக்கூடியது. கலப்பு பயனின்றிப் போவதால், சினையாக முடியாத தன்மை ஏற்படும்.
இதற்கென எந்த தடுப்பூசியும் கிடையாது. ஆனால் செயற்றைக் கருத்தரிப்பின் மூலம் இது பரவுவதைத் தடுக்கலாம். காளைகளை கலப்பிற்கப் பயன்படுத்தும் முன்பு நன்கு பரிசோதிக்கவேண்டும். இது காளையினால் பரவுவதாகையால் ஒரு முறை பாதித்தால் அது கடைசி வரை காளைக்குள்ளேயே தங்கிவிடும்.
விப்ரியோ கருச்சிதைவு நோய்
கருவைக் கலைக்கம் மற்றொரு நோய் விப்ரியொசிஸ் ஆகும். இதுவும் காளையிடமிருந்து கலப்பின் போது பசுவிற்குப் பரவி அதை மலடாக்குகிறது. இதற்குத் தடுப்பு மருந்து உள்ள போதிலும், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்நோயுள்ள காளையுடன் கலப்பு செய்யப்படும், தடுப்பூசி கொடுக்கப்படாத மாடுகள் மலட்டுத்தன்மை அடைகின்றன.
இதில் பசுவின் யோனிக் குழாய், கருப்பை பாதிக்கப்படலாம். ஆனால் வெளியில் அறிகுறிகள் இருக்காது. பாதிக்கப்பட்ட பசு கருத்தரித்தாலும் 5-6 மாதங்களில் கருவானது சிதைந்து பிறந்து விடும். இதன் பின்பே பசு பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடியும்.
எனினும் 1 வருடத்தில் மீண்டும் பசு குணமாகிவிடும். 2 தடுப்பூசிகள் போடப்படவேண்டும். அதுவும் கலப்பிற்கு 4 வாரங்கள் முன்பு லெப்டோஸ்பைரோசிஸின் தடுப்பு மருந்துடன் கலந்து கொடுக்கலாம். செயற்கைக் கருத்தரிப்பு முறையும் இந்நோய்க்கு ஏற்ற மாற்று ஆகும். ஆனால் அதன் விந்துக்கள் விப்ரியோஸ் மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ், டிரைக்கோமோனியாஸிஸ் பரிசோதனைக்கு உட்பட்டிருக்கவேண்டும்.
மருக்கள்

பாப்பிலோமாவைரஸ்
என்னும் வைரஸ் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது. இது இளம் கன்றுகள் 1-2 வயதுள்ள கன்றுகளை பாதிக்கிறது. நோய் தோன்றி 1-6 மாதங்கள் கழித்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
பொதுவாக இந்த மருக்கள் விலங்குகளுக்கு ஒரு அருவருப்பான தோற்றத்தைத் தரும். இது தானாகவே சுருங்கி சில மாதங்களில் விழுந்து விடும். அல்லது வீடுகளில் பழங்காலத்திலிருந்து செய்வது போல் ஏதேனும் எண்ணெய், பிரஷ் கொண்டு தேய்த்தாலும் போய்விடும். கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றை வைத்தும் நீக்கலாம்.
இந்த மரு அதிக அளவு பரவிவிட்டால் இந்தக் காயங்களில் இருந்து எடுத்த மருந்தில் தடுப்பூசி அளிக்கலாம்.

மரநாக்கு நோய்

இது உருண்டை வடிவ ஆக்டினோபேசில்லஸ் லிக்னீரிசி என்னும் பாக்டீரியாவினால்  பரவுகிறது. இந்த பாக்டீரியாவானது நாக்கின் மடிப்பு மற்றும் காயங்கள் வழியே திசுக்களுக்குள் உட்புகுகிறது. ஏதேனும் கடினமான தண்டு அல்லது தீவனம் கொடுக்கும்  போது அது நாக்கில் காயம் ஏற்படுத்தி இது போன்ற பாக்டீரியங்கள் நுழைய ஏதுவாகிறது. இது நாக்கின் மென்மையான திசுக்களைப் பாதிக்கிறது. இதன் பாதிப்பு உடனடியாக நாக்கு தடித்தல் மூலம் வெளிப்படுகிறது. தடித்த நாக்கில் வலி இருக்கும். இது உள்ளே சற்று வளர்வதால் மாடுகளால் இயல்பாக அசை போட முடியாது. நாக்கில் புண்கள் தோன்றுவதால் எதுவும் உண்ணவோ, அருந்தவோ இயலாது. இது கவனித்தால் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.

சிகிச்சையின் அறிகுறி தெரிந்த உடனே ஆரம்பித்தால் நன்று. அயோடின் மற்றும் டெட்ராசைக்ளின் மருந்துகள் அளிக்க வேண்டும். நோய் முத்திவிட்டால் அறுவை சிகிச்சையும், தினசரி அயோடின் தடவ வேண்டியும் இருக்கும்.
மாட்டம்மை

இந்நோய் கண்ட மாடுகளில் முதலில் லேசான காய்ச்சல் இருக்கும். பின்னர் மடியிலும், காம்புகளிலும் கொப்புளங்கள் ஆரம்பித்து. கடைசியில் சுருங்கி, கருகி, உதிர்ந்து விடுகின்றன. பால் கறக்கும் போது கொப்புளங்கள் இரணமாகி மாடுகளுக்கு வேதனையை அளிக்கும். இந்நோயோடு நுண்ணுயிர்க் கிருமிகளும் சேர்ந்து தாக்காமல் இருந்தால், மாட்டம்மை நோய் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குறைந்து விடும்.

தடுப்பு முறை


பால் கறக்கும் தொழுவத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பால் கறக்கும் முன் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீரில் மடியினைக் கழுவிய பின்னர் தினமும் பால் கறக்கவேண்டும் கொப்புளங்களுக்குக் கிருமி நாசினி மருந்து தடவி சிகிச்சை அளிக்கவேண்டும்.
காசநோய்
இந்நோய் மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குலோசிஸ் என்னும் ஒரு வகை நுண்ணுயிர்க் கிருமியால் ஏற்படுகிறது. இக்கிருமிகள் மாடுகளைப் பாதிப்பதோடு மனிதர்களையும் பாதிக்கின்றன. இந்நோய்க் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கிப் பராமரிப்பதாலும் மனிதர்களுக்குப் பரவுகின்றன. ஆகவே இந்நோயைக் குறித்து நாம் எச்சரிக்ககையாய் இருக்கவேண்டும்.
நோய் அறிகுறிகள்
  1. பாதிக்கப்பட்ட மாடுகளில் விட்டு விட்டு லேசான காய்ச்சல் இருக்கும்.
  2. மாடு மிகவும் இளைத்து மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறையும்.
  3. இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.
  4. மார்பிலுள்ள நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும்.
  5. குடற்பகுதி பாதிக்கப்படுமானால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
  6. மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு, பாலின் தன்மை கெட்டுப்போகும்.
  7. பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. தொடர்ந்து இளைத்துக்கொண்டே வரும் மாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி காச நோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.
  2. நோயுற்ற மாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தவேண்டும்.
  3. ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
  4. பாலை, கொதிக்க வைத்து அருந்தவேண்டும்.
  5. சுற்றுப்புறச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும்.
  6. மாடுகளுக்குத் தேவையான அளவு, தரமான தீவனம் அளிக்கவேண்டும். போதுமான அளவு பசுந்தீவனம் கொடுக்கவேண்டும். காற்றோட்ட வசதி, நல்ல தீவனம் இவை இரண்டும் இந்நோய்த் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன. கன்று பிறந்த 10 நாட்களுக்குள் பி.சி.ஜி தடுப்பூசி போடவேண்டும்.
  7. பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க்கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.
ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள்

உட்புற மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகளால் கறவை மாடுகளில் அதிகமான பொருட்சேதம் ஏற்படுகிறது.

உட்புற ஒட்டுண்ணி நோய்

நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்களால் ஏற்படும் நோய்கள்

கறவை மாட்டின் உணவுப் பாதையில் வாழும் நாடா, உருண்டை மற்றும் தட்டைப்புழுக்கள்போன்றவைகளும் காக்சிடியா எனப்படும் ஓரணு வகை ஒட்டுண்ணியும் மாட்டின் ஆரோக்கியத்தை மிகவும் பாதித்து உற்பத்தியைக் குறைக்கின்றன. இத்தகைய ஒட்டுண்ணிகள், மாட்டின் இரத்தத்தை உறிஞ்சியோ அல்லது மாட்டிற்கு சேரவேண்டிய உணவுப் பொருட்களைத் தாம் உண்டோ அல்லது உட்கொள்ளப்படும். உணவு சரிவர குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுத்தோ அல்லது சில நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து குடற்பகுதியைத் தாக்கியோ மாட்டின் நலத்தைக் கெடுக்கின்றன.
நோய் அறிகுறிகள்
  1. கன்றுகள், மாடுகள் நாளடைவில் மெலிந்து சோகையுற்றுக் காணப்படும்.
  2. சரிவர தீவனம் உட்கொள்ளாது.
  3. பற்களை அடிக்கடி நறநறவென்று கடித்தல், உடலில் அதிக ரோமம் வளர்தல், ரோமம் சிலிர்த்துக் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
  4. வயிற்றுவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
  5. சாணம், தண்ணிர் போல இருப்பதுடன் நுரையும் காணப்படும். சிகிச்சை செய்யாவிடில் மாடுகள் இறந்துவிடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. சுகாதார விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். போதிய ஊட்டச்சத்து அளிக்கவேண்டும்.
  2. தண்ணீர், தீவனம், புல் போனறவற்றில் உள்ளுறை ஒட்டுண்ணியின் முட்டையோ அல்லது லார்வாவோ இருக்கக்கூடாது.
  3. சாணத்தை அவ்வப்போது அப்புறப்படுத்தவேண்டும். கம்போஸ்ட் செய்த சாணத்தை எருவாகப் பயன்படுத்தவேண்டும்.
  4. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சாணத்தை, பரிசோதனை செய்து உள்ளுறை ஒட்டுண்ணி இருப்பின் மருந்து கொடுக்கவேண்டும்.
தைலேரியோசிஸ்

இந்நோய் கலப்பினப் பசுக்களைத் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்நோய், தைலேரியா ஆனுலேட்டா என்ற ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது.
இந்நோய், உண்ணி கடிப்பதின் மூலம் ஒரு மாட்டில் இருந்து மற்ற மாடுகளுக்கப் பரவுகிறது. உண்ணி அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. நோயுற்ற மாட்டை உண்ணிகள் கடித்து விட்டு நோயில்லா மாட்டை மீண்டும் இரத்தத்தை உறிஞ்ச கடிக்கும் சமயத்தில் இந்நோய் மற்ற மாடுகளுக்கும் பரவுகிறது.
நோய் அறிகுறிகள்
  1. நோயுற்ற மாடுகளில் அதிகக் காய்ச்சல் இருக்கும். சுமார் ஒரு வாரத்திற்கு காய்ச்சல் குறையாது.
  2. தோலின் அடிப்பகுதியிலுள்ள நிணநீர்க் கட்டிகள் வீங்கிக் காணப்படும்.
  3. காது, கழுத்துப் பகுதிகளில் உண்ணிகள் அதிகம் காணப்படும்.
  4. சாணம் முதலில் கெட்டியாகவும், பின்பு இளகளாகவும், இரத்தம் கலந்தும் இருக்கும். வயிற்றுப் போக்கு இருக்கும்.
  5. சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படும்.
  6. காய்ச்சல் அதிகமிருந்தாலும் மாடு, தீவனம் எடுத்துக் கொண்டிருக்கும்.
  7. சினைப் பசுக்களில் கருச்சிதைவு ஏற்படும்.
  8. இரத்தச் சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 10 நாட்களில் இறந்து விடும்.
தடுப்பும் பாதுகாப்பும்
  1. இந்நோயைத் தடுக்க உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்ணியைக் கொல்ல சுமத்தியான், மாலத்தியான் போன்ற மருந்துக் கரைசலை 0.5-1 என்ற அளவில் தெளிக்கவேண்டும். பூட்டாக்ஸ் என்ற மருந்தை 1 லிட்டருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மாடுகளை இம்மருந்து கொண்டு குளிப்பாட்டலாம். உண்ணி தங்கும் செடி, புதர், சுவற்றின் கீரல், ஓட்டை, சந்து போன்றவற்றில் மருந்தைத் தெளிக்கவேண்டும்.
  2. கூடுதல் தீவனம், நல்ல பராமரிப்பு போன்றவற்ற வழங்கி மாட்டைக் காப்பாற்றி இலாபம் பெறலாம். நோயிலிருந்து தப்பிய மாடுகள், பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இரத்தச் சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.
பெபிசியோசிஸ்

இந்நோய், பெபிசியா பைசெமினா என்ற ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும். இது, உண்ணிகள் கடிப்பதால் ஏற்படும் நோயாகும். உண்ணிகள் அதிகமாக உள்ள இடங்களில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பினப் பசுக்களில் இந்நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நோய் அறிகுறிகள்
  1. காய்ச்சல் அதிகமாக இருக்கும்.
  2. சிறுநீர், காப்பி நிறத்தில் வெளிவரும்
  3. மாட்டின் கழுத்துப்பகுதியில் உண்ணிகள் அதிகமாக இருக்கும்.
  4. இரத்தச்சோகை ஏற்பட்டு மாடு மெலிந்து 7-10 நாட்களில் இறந்து விடும்.
 தடுப்பும் பாதுகாப்பும்
  1. உண்ணியைக் கட்டுப்படுத்த வேண்டும். மேற்கூறிய உண்ணிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
  2. நோயுற்ற மாடுகளுக்கு மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்ளலாம்.
  3. இரத்தச்சோகைக்கு மருந்து கொடுக்கவேண்டும்.
  4. உண்ணிக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றவேண்டும்.
(ஆதாரம்: கறவைமாடு வளர்ப்பு, தமழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை.
& http://cattletoday.info/index.html )

Read more...

பசு - இனப்பெருக்கம்

கால்நடை (பசு) இனப்பெருக்கம்

இளம்பசு


முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும். 2 வருடங்களுக்குள்ளாக கருவுற்றுவிடவேண்டும்.
Cattle_selection
இளம்பசு
பசு

பசுவைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பால் உற்பத்தி. ஒரு கலப்பின மாடு நாளொன்றுக்கு 5.5 லிட்டர் பால் கொடுக்கவேண்டும். பொருளாதார ரீதியில் 305 நாட்களுக்கு, 2500 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். முதல் 2 கன்றுகளில் மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லி எனில் அதன் அப்பருவப் பால் உற்பத்தி 2000-2500 லி ஆகவும், நாளொன்றுக்கு 15 லி பால் கறக்கும் மாட்டின் ஒரு பருவ உற்பத்தி 3000 லி வரையிலும் இருக்கும். முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்களுக்கு மிகாமலும், அடுத்தடுத்த கன்று இடைவெளி 12-15 மாதங்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் பசுவானது எந்த உடல் குறைபாடும் இன்றி, நன்கு வளர்ச்சியடைந்த மடியுடன் நல்ல பால் நரம்புகளுடன், கையாள்வதற்கு எளிதானதாக இருக்கவேண்டும். வயது முதிர்ந்த மாடுகளை மாற்றிவிட்டு புதிய இளம் பசுக்களைச் சேர்க்கலாம். பண்ணைக்குள் வளர்ந்த இளம் பசுக்களின் மூலம், வருடம் ஒரு முறை 20 சதவிகிதம் அளவாவது முதிர்ந்த மாடுகளை மாற்றிக் கொள்ளுதல் நன்று.
மந்தைகளின் உற்பத்தி சரியில்லாத நிலையில் வெளியில் இருந்து மாடுகளை வாங்கிச் சேர்த்துக் கொள்ளலாம்.



cattle_Cow
பசு

காளை மாடுகள்

கன்றுகளின் மரபியல் குணங்களில் 50 சதவிகிதம் அளவு காளை மாடுகளுக்கு பங்குள்ளது. புதிய தலைமுறைகளின் மேம்பாடு நல்ல காளைகளின் தேர்வைப் பொறுத்தே அமையும். பசுத் தேர்வில் மட்டும் தீவர கவனம் செலுத்தினால் போதாது. நல்ல பால் உற்பத்தி பெறக் காளையிலும் நல்ல வம்சாவளியுள்ள காளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல இளம் காளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இளம் காளைகளை இனப்பெருக்கக் கலப்பில் பயன்படுத்தும் போது 4500 கி.கி அளவு  பால் உற்பத்தி ஒரு பருவத்தில் பெற முடிகிறது. பிற பண்புகளான கன்று ஈனுவதில் நோய் எதிர்ப்பு போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும்.
cattle_bull
காளைமாடு


கால்நடை விவசாயிகள் காளைத் தெரிவு பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும். பல ஆராய்ச்சி அறிவியல் நிறுவனங்களில் செயற்கைக் கருவூட்டல், காளைத் தெரிவு பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். பாரம்பரியப் (வம்சாவளிப்) பண்புகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்த காளைகளைக் கலப்பில் பயன்படுத்திப் பிறக்கும் கன்றின் பண்புகள் அடிப்படையில் காளைகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. முறையற்ற கலப்பு, விரும்பத்தக்காத பண்புகள் கன்றில் உருவாக வாய்ப்பளிக்கும்.

(ஆதாரம்: www.vuatkerala.org)
கால்நடை இனப்பெருக்கம்

இந்தியாவில் கால்நடை வளர்ப்பு வேளாண்மைக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது நமது கிராமப் பொருளதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் நம் நாட்டின் கால்நடை எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணம் நல்ல இனப்பெருக்க முறைகளும், புதிய கண்டுபிடிப்பும் கிராமங்களில் இல்லாமையே ஆகும். கீழ்வரும் கருத்துக்கள் மூலம் கால்நடைகளில் சிறந்த இனப்பெருக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்

கால்நடைப் பராமரிப்பில் இனப்பெருக்கம் இன்றியமையாத ஒன்று. சரியான இனப்பெருக்கமும், கன்று ஈனுதலும் இல்லாமல் கால்நடை வளர்ப்பில் இலாபம் பெற இயலாது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு ஆரோக்கியமான கன்றை ஒவ்வொரு கால்நடையும் கொடுக்கவேண்டும். அதற்கேற்ற, சிறந்த திறன் கால்நடைகளிடம் இருத்தல்வேண்டும்.கலப்பில் ஈடுபட்டு, கருவைப் பெற்று அதைப் பாதுகாத்து, சினைக்கால முடிவில் நல்ல கன்றாகக் கொடுப்பதே இனப்பெருக்கம் ஆகும். இந்தî சங்கிலித் தொடரில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பசுவானது கருவைப் பெற முடியாமல் போகலாம் அல்லது கரு இறப்பு,  முழு வளர்ச்சியற்ற பிறப்பாக வெளிப்படும்.
cattle_matting
இனச்சேர்க்கை

இனப்பெருக்கத் திறன் மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைப் பொறுத்தது. இதர காரணிகளான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் முறையான பராமரிப்பு போன்றவற்றில், ஒரே இன மாடுகளிடையே இனப்பெருக்கத் திறன் வேறுபடும். சரியான பராமரிப்பையும் மீறி மரபியல் காரணிகள் செயல்பட்டால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். எனவே மரபியல் பண்புகளையும் மேம்படுத்த வேண்டும். ஒரு சிறந்த இனப்பெருக்க முறைக்கு நல்ல கவனிப்பு அவசியமாகும்.
இனப்பெருக்கத் திறனை பாதிக்கும் காரணிகள்:

கரு முட்டையின் எண்ணிக்கை


ஒவ்வொரு கருவுறுதல் நிகழ்ச்சியின் பொதும் வெளிவரும் கருமுட்டைகள் ஒரு முக்கியக்காரணி. இந்த கரு முட்டைகளை கரீஃபியின் பாலிக்கிள் குழாயில் விழச் செய்வதே கருவுறுதல் ஆகும். ஒரு முட்டை 5-10 மணி நேரம் வரை இருக்கும். இந்த நேரத்தில் கலப்பு செய்தால் மட்டுமே கரு உருவாகும்.

கருத்தரித்தல் சதவீதம்


சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யாமல் மிகச் சீக்கிரமாகவோ அல்லது மிகத் தாமதமாகவோ செய்தால் விந்தணுவும், கருமுட்டையும் சந்தித்துக் கொள்ள முடியாமல் போகலாம். எனவே மாடு கருவுறாது.

கரு அழிதல்


கறவை மாடுகளில் கரு அழிதல், சரியாக கருத்தரியாமை, கருத்தரித்தபின் கருவானது கருப்பையில் நிலை கொள்ளாமல் வெளித்தள்ளப் படுவதால் (அ) கரு வளரும்போது ஏதேனும் அடிபடுவதால் ஏற்படுகிறது. இவ்வாறு கரு அழிவது ஹார்மோன் சுரக்காததால் (அ) சரியான விகிதத்தில் இல்லாததால் ஏற்படுகிறது.

முதல் சினையின் காலம்


முதல் கன்று ஈனும் காலம் அதிகமானால் அது இனப்பெருக்கத்திறனைப் பாதிக்கும். விரைவில் சினைக்கு வரும் மாடுகள், சிறிது குட்டையாகக் காணப்பட்டாலும் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவையாக இருக்கும்.

சினைப் பருவ எண்ணிக்கை


குறுகிய காலத்தில் (அடிக்கடி)சினைக்கு வரும் மாடுகள் நல்ல இனப்பெருக்கத் திறனுடையவை. விரைவில் சினைப் பருவமடைந்த மாடுகளை அதன் ஒவ்வொரு பருவத்திலும் முடிந்த வரை இனவிருத்தி செய்து கொள்வது நல்லது. இம்முறையில் அதன் வாழ்நாள் திறன் அதிகரிக்கும். கன்று ஈன்ற 9-12 வாரங்களுக்குப் பிறகு அடுத்த சினைக்குத் தயாராகிவிடும்.

வாழ்நாள்


பசுவின் வாழ்நாள் அளவும் இனப்பெருக்கத்திறனை அதிகரிக்கும். பசுக்கள் அதிக நாட்கள் ஆரோக்கியத்தோடு இருந்தால் ஆண்டுதோறும் மாற்றும் பசுக்கள் எண்ணிக்கை குறையும். அதோடு ஈனும் கன்றுகள் எண்ணிக்கை அதிகமாகும்.
இனப்பெருக்கத் திறனை மேம்படுத்தும் முறைகள்
  1. சினை அடைந்த காலம், கன்று ஈன்ற நாள் போன்வற்றை பதிவேட்டில் பதிந்து பராமரித்து வந்தால் ஒவ்வொரு பசுவிற்கும் அடுத்த சினைக்கான காலத்தை முறையாகக் கணிக்கலாம்.
  2. சரியான சினைத் தருணத்தில் கலப்பு செய்யவேண்டும்.
  3. பசுக்களில் திரவப்போக்கு அதிகமிருந்தால், மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்கலாம்.
  4. 4 கலப்பிற்குப் பின்பும் சினைத் தரிக்கவில்லை எனில் மருத்துவரிடம் கொண்டு செல்லலாம்.
  5. ஒவ்வொரு இனக்கலப்பிற்குப் பிறகும், கன்று ஈனும் முன்பு ஒரு முறை முழுமையாகப் பரிசோதனை செய்துவிடவேண்டும்.
  6. வெளியிலிருந்து மாடுகள் வாங்கிவரும் போது நன்கு பரிசோதித்த பின்பே மந்தையில் சேர்க்கவேண்டும்.
  7. கன்று ஈனுவது அதற்காகத் தயாரித்துள்ள தனி அறையில் சுத்தமான இடத்தில் நிகழ்தல் வேண்டும். ஒவ்வொரு தடவையும் கன்று பிறந்த பின்பு நல்ல கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிடவேண்டும்.
  8. சரியாக நோய் எதிர்ப்புச் சக்தி பெற்றுள்ளவையா என்று பார்த்துத் தடுப்பூசிகளை முன்கூட்டியே போட்டு விடுதல் நலம்.
  9. சுகாதாரமான முறையைப் பின்பற்றலாம்.
  10. தேவையான ஊட்டசத்துக்களை அளிக்க வேண்டும்.
  11. சரியான பாகாப்பு முறைகளைக் கையாளுதல் வேண்டும்.
  12. தேவையான இடவசதி செய்து வைத்தல் வேண்டும்.
  13. சரியான சினைக்கு வரும் பருவத்ததை சிறிய சூடாக இருந்தாலும் அதை டீசர் காளை மூலம் கண்டுபிடிக்கலாம்.
(ஆதாரம்: www.world_agriculture.com)

Read more...

பசு - பண்ணையின் தினசரி நடவடிக்கைகள்

பண்ணையின் தினசரி நடவடிக்கைகள்

அட்டவணை


பண்ணையில் மேற்கொள்ள வேண்டிய தினசரி நடவடிக்கைகள்
நேரம் (மணி) தோராயமாக
வ.எண்
பண்ணை நடவடிக்கைகள்
3.00-3.30
1.
கழுவி, சுத்தப்படுத்துதல் (கறவை மாடுகளை)
3.30-5.00
1.
அட்டவணை தீவன அளவில் ஒருபாதி தீவனம் பால்கறக்கும் முன்பு அளித்தல்

2.
பால் கறத்தல்
5.00-5.30
1.
கறந்த பாலை சேகரிப்பாளரிடம் கொடுத்தல் மேலும் முந்தைய நாளின் பால் (கேனை) பாத்திரத்தை வாங்கிக் கொள்ளுதல்

2.
பால் கறக்கும் இடம் மற்றும் பாத்திரங்களை தொற்று நீக்கி கொண்டு சுத்தப்படுத்துதல்
5.30-8.00
1.
கறவை மாடுகளின் கொட்டிலை சுத்தப்படுத்துத்ல

2.
கறவை மாடுகளுக்குத் தீவன மளித்தல்

3.
பண்ணையின் வளாகங்களைச் சுத்தம் செய்தல்

4.
நோய் தாக்கிய கால்நடைகளைத் தனிமைப்படுத்துதல்

5.
செயற்றைக் கருவூட்டல் முறையைத் தேவையான பசுக்களைத் தனியே பிரித்தல்
பால் கறப்பதற்கென 12-14 பசுக்களுக்கு ஒருவர் எனத் தனி ஆட்களை நியமிக்கலாம். இவர்கள் கறந்து முடித்து செல்லும்போது பண்ணை வேலை ஆட்கள் வேலைக்கு வருமாறு நியமித்தல் நலம்.
நேரம் தோராயமாக (மணியில்)
வ.எண்
பண்ணை வேலைகள் / நடவடிக்கைகள்
8.00-12.00
1.
கன்றை சுத்தப்படுத்துதல், தாய்மைக்குத் தயார்செய்தல், காளை மற்றும் கொட்டில்களை தயார்படுத்துதல்

2.
கன்று, காளை, சினை மாடுகளுக்குத் தீவனம் அளித்தல்

3.
காளைமாடுகளுக்கு பராமரித்தல்

4.
நோயுற்ற கால்நடைகளுக்கு மருந்து அளித்தல்

5.
கலப்பிற்குத் தயாராயுள்ள மாடுகளை இனக் கலப்பு செய்தல்

6.
பசுந்தீவனங்கள் அறுவடை செய்து, துண்டுகளாக தீவனத் தொட்டிகளில் இடுதல்
கவனிக்க வேண்டியது

கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் நேரம். குளிர் காலங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. கோடை காலமாக இருந்தால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை.
நேரம் தோராயமாக (மணி)
வ.எண்
பண்ணைச் செயல்கள்
12.00-1.00
1.
வேலை ஆட்களுக்கான மதிய உணவு இடைவேளை
1.00-3.00
2.
பண்ணையின் இதர வேலைகளான கால்நடைகளை இனங்கானுதல், பதிவேடுகளில் பதித்தல் சரியான தடுப்பூசிகள் சரிபார்த்தல் பழுதடைந்த உபகாரணங்களை சரிசெய்தல், வேலிகளை முறைப்படுத்துதல் கயிறு தயாரித்தல் தீவனங்களைப் பதப்படுத்துதல் சரியான இடைவெளியில் மருந்து தெளித்தல் குடற்புழு மருந்து கொடுத்தல், கொம்பு வளராமல் தடுக்கும் நடவடிக்கைகள், கால்நடை வாங்குதல் விற்றல்
(ஆதாரம்: டாக்டர்.சி.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வே.க, மதுரை)

கொம்புக்கருத்து நீக்கத்தின் பயன்கள்


கால்நடைகளில் கொம்புகள் தேவையில்லாத ஒன்று இதன் மூலம் கால்நடைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு காயப்படுத்திக் கொள்கின்றன. மேலும் கையாள்பவருக்கும் இது கடினம் ஆகும். கால்நடை உட்கொள்ளும் உணவின் ஒரு பகுதி இந்த கொம்பு வளர்ச்சியில் செலவிடப்படுகிறது. எனவே இந்த அவசியமற்ற அமைப்பை நீக்கிவிடுதல் நன்று.

கொம்புக் குருத்தை நீக்குதல்


கொம்புக் குருத்து நீக்கம் என்பது கொம்பு உருவாக்கும் செல்களை அழிப்பதாகும். முன்தலை சைனஸ் பகுதியைப் பாதிக்காமல் இதைச் செய்ய வேண்டும். இரசாணனங்கள் அல்லது சூடான இரும்பை பயன்படுத்திக் கொம்புக் குருத்தை நீக்கலாம். பல முறைகள் குருத்தை நீக்குவதற்கு இருந்தாலும் யாவற்றிலும் நன்மை தீமைகள் உண்டு. சூடான இரும்பு கொண்டு தேய்ப்பதே சாதாரணமாகக் கையாளப்படும் முறையாக இருந்தாலும் அது மிகவும் வலி ஏற்படுத்தக் கூடியது. மின்சார பியூட்டேன் கொண்டும் நீக்க இயலும். மிக அதிகமான வெப்பம் பயன்படுத்தும்போது குருத்துக்குக் கீழ் உள்ள எலும்புகள் பாதிப்படையும் காஸ்டிக் (caustic) முறையில் குருத்து நீக்குதல் சிறந்தது. காஸ்டிக் பொருட்களான சோடியும் ஹைட்ராக்ஸைடு, கால்சியம் ஹைட்ராக்ஸைடு குருத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியோ கண்களோ பாதிக்கப்படலாம். எந்த அளவு இரசாயனம் திசுக்களுடன் தொடர்புகொள்கிறதோ அந்தளவு பாதிப்பு அதிகம் கால்சியம் குளோரைடு ஊசிமூலம் செலுத்தியும் குருத்தை நீக்கலாம். ஆனால் முறையான மயக்க மருந்தளித்தல் போன்ற முன்னேற்பாடின்றி இதை பயன்படுத்த முடியாது. மேலும் கத்தி குருத்து நீக்கும் (கரண்டி, ஸ்பூன்)(spoon) போன்றவை மூலமாகவும் நீக்கலாம்.

குருத்து நீக்கும் போது கவனிக்க வேண்டியது


1. பண்ணை மேலாளர் அவரவர் வேலைகளை சரியாகப் பிரித்து நேரம் ஒதுக்க வேண்டும். சில நேரங்களில் வேலை ஆட்கள் அதிக நேரம் வேலை செய்யவேண்டியிருக்கும்.

2. பால் கறப்பவர்கள் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து பின் மாலை 5மணிக்கு சென்று விடுவார்கள். வேலை ஆட்கள் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்.
நேரம் தோ (மணி)
வ.எண்
பண்ணை வேலைகள்
2.30-3.00
1.
பால் கறப்பவர்கள் கறவைகளை கழுவி சுத்தம் செய்தல்
3.00-4.30
1.
பால் கறக்கும் முன்பு அடர்தீவன மளித்தல்

2.
பால் கறத்தல்

3.
கன்றுகளை சுத்தம் செய்து தீவனமளித்தள் சினை மாடுகள், காளை மாடுகளுக்கு அடர் தீவன மளித்தல்
4.30-5.00
1.
பாலை சேகரிப்பாளரிடம் கொடுத்துவிட்டு, காலையில் பால் அனுப்பிய (கேன்) பாத்திரங்களை பெற்றுக்கொள்ளுதல்

2.
பால் பண்ணையை (கறக்குமிடம்) சுத்தம் செய்தல்

3.
கன்றுகள், பசுக்கள், காளை மாடுகளுக்குப் பசுந்தீவனம் அளித்தல்
5.00-6.30
1.
கறவை மாடுகளின் கொட்டிலைச் சுத்தம் செய்தல்

2.
கறவைப் பசுக்களுக்குப் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் அளித்தல்

3.
பண்ணை வளாகங்களைச் சுத்தம் செய்தல்
அதைச் சுற்றியுள்ள முடிகளை அகற்ற வேண்டும்.

கொம்பு நீக்கம்


கொம்பு முளைத்த பின்பு நீக்குவதே கொம்பு நீக்கம் ஆகும். வளர்ந்த கொம்பை நீக்க கத்தி இரம்பம், கரன்டி மின்சார ஒயர், குழாய் போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். பார்னஸ் முறையில் குழிந்த கொம்பு நீக்கியைப் பயன்படுத்தலாம்.
முதிர்ந்த கால்நடைகளுக்குக் கொம்பு நீக்கம் செய்வதால் அதன் முன்தலைப் பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பைக் குறைக்க அயோடின் அல்லது டிஞ்சர் தடவலாம்.

(ஆதாரம்: http://www.avma.org/reference/backgrounds/dehorning_cattle_bgnd.asp)
கொம்பு மற்றும் வால் நீக்கம்

கொம்பு நீக்கமானது கன்று மற்றும் குட்டிகளுக்கு இளம் வயதிலேயே செய்யப்படுதல் பராமரிப்புக்கு எளிதாகும்.
இயற்கையாகவே கொம்பில்லாத கால்நடை தவிர மற்ற அனைத்திற்கும் கொம்பு நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவை மேய்ச்சலின்போது மற்றும் தீவனம் அளிக்கும்போது ஒன்றையொன்று தாக்கி காயப்படுத்திக் கொள்ளும். மேலும் அதை கையாள்பவரையும் காயப்படுத்திவிடும்.
  • வண்டியிழுக்கத் தேவையான கொம்பு உள்ள மாடுகளைத் தனித்தனியே கட்டி வைத்தல் நலம்
  • வெள்ளாடுகளுக்கும் கொம்பு நீக்கிம் செய்தல் வேண்டும். இல்லையெனில் மேயும்போது எங்கேனும் கொடிகளிலோ, வேலியிலோ சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது
  • கொம்புக் குருத்து நீக்கம் பிறந்த சில நாட்களிலேயே செய்யப்பட வேண்டும்
  • அல்லது கொம்பு மிகச் சிறிதாக இருக்கும்போதே செய்தல் வேண்டும். கடினமான கொம்புகளை நீக்கும்போது வலியும் அதிகமாக இருக்கும்
  • கொம்பு நீக்கிய பின்பும் சிறிது நாட்கள் அந்த இடத்தைக் கவனித்து வரவேண்டும். எங்கேனும் மீண்டும் கொம்பு நீக்கம் செய்ய வேண்டும்
  • ஆடுகளில் கொம்பானது மாடுகளை விட விரைவாக வளரும். எனவே ஆட்டுக்குட்டிகளை அடிக்கடி கவனித்து வருதல் வேண்டும்
சூடான இரும்புகொண்டு நீக்குதல்
  • பெரும் பாலும் பின்பற்றப்படும் முறையானது கொம்புக்குருத்தைச் சுற்றிலும் அமிலத்தைத் தடவி சூடான இரும்புக் கம்பிகொண்டு தேய்த்தல் ஆகும்
  • இது ஒரு சில நிமிடங்களே செய்யப்பட்டாலும் அதிகமாக இருக்கும். மேலும் தலையில் அதிகமான சூடு படுவதால் அது குறையும் வரை கால்நடை வலியைத் தாங்க முடியாமல் அவதிப்பட வேண்டும்.
  • காய்ச்சிய இரும்பில் தேய்க்கும்போது மிகவும் அதிகமாக அழுத்துதல் கூடாது. அதுவும் ஆடுகளில் மண்டையானது சிறியதாகவும் ஓடுகள் மெல்லியதாக இருப்பதால் எளிதில் காயம் பட்டுவிட வாய்ப்புண்டு
இரசாயன அமிலங்களைப் பயன்படுத்துதல் கூடாது
  • கடைகளில் பல இரசாயன அமிலங்கள் கொம்பு நீக்கத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றன
  • இவற்றை வாங்கிப் பயன்படுபடுத்தும் போது அவை குருத்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை எரித்து நிறைய பண்புகளை ஏற்படுத்துகிறது
  • இதை பயன்படுத்தும்போது பசுவின் மடியிலோ, மற்ற கன்றின் முகத்திலோ பட்டு எரிச்சலை முற்படுத்துகிறது. எனவே இரசாயன அமிலங்களைக் கொம்பு நீக்கத்திற்கும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது
உலோகத் தோண்டி கொண்டு நீக்குதல்
  • உலோகம் மூலம் கொம்புக் குருத்தோடு தோண்டி எடுத்தல் மற்றொரு முறையாகும்
  • கொம்பு நீக்கும் தோண்டியானது இதற்காகவே தனியாகச் செய்யப்பட்ட உலோகம் இது கொம்புடன் அதன் அடிப்பாகத்தையும் சேர்த்துத் தோண்டி விடுகிறது
  • எனவே இந்த முறையில் இரத்தப்போக்கு சேதாரம் மற்றும் வலி அதிகமாக இருக்கும்
தகுந்த முறை
  • அனைத்திலும் சிறந்த முறை ஒரு கால்நடை மருத்துவர் உதவியுடன் மின்சார இயந்திரம் மூலம் நீக்குவதே ஆகும்
  • இம்முறையில் இரத்தக்கசிவு, வலி போன்றவை அதிகம் இருக்கின்றது. கட்டணம் சிறிது அதிகமாணாலும் கால்நடைகளுக்கு எந்த சேதாரமும் இருக்காது
  • இவ்வாறு மருத்துவர் உதவியுடன் அடையாளம் குறியிடுதல் ஆண்குறி நீக்குதல் மற்றும் கொம்பு, அதிக காம்புகளை நீக்கம் செய்வதே சுகாதாரமான முறையாகும்
  • கொம்பு வளர்ந்த பின்பு நீக்குவதை விட வளரும் முன்பு குருத்திலேயே நீக்குவதே சிறந்தது. ஏனெனில் வளர்ந்த கொம்பை நீக்கவதில்தான் வலியும் இரத்தப்போக்கும் அதிகமாவதுடன் கடினமாகவும் இருக்கும்
  • எப்போதும் கொம்பை நீக்கிய பின்பு ஏதேனும் தொற்று நீக்கிகள் தடவவேண்டும். எ.கா: டெட்டால், வேப்பெண்ணெய்
ஆண்மை நீக்கம்
  • பொதுவாக 8-10 வாரங்களான செம்மறி மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளை ஆண்மை நீக்கம் செய்தல் வேண்டும். அப்போதுதான் அவற்றைக் கையாள்வது எளிது
  • இதனை ஒரு மருத்துவர் உதவியின்றி நாமாக செய்தல் தவறு
  • செம்மறிக் குட்டிகளை 6 மாத்திற்குள் இறைச்சத்து விற்பதாக இருந்தால் ஆண்மை நீக்கம் அவசியமில்லை. ஆனால் அவற்றை 4 மாதத்திலிருந்து பெண் குட்டிகளுடன் இல்லாமல் தனியே வைத்தல் வேண்டும்
  • ஆண்மை நீக்கம் செய்யும்போது வலி அதிகமாக இருக்கும். செய்யத் தெரிந்தால் மட்டுமே நாமாக செய்தல் வேண்டும்
  • மருத்துவர் உதவியுடன் வலிகுறைப்பான் மயக்க மருந்து கொடுத்த பின்பு செய்தலே சாலச்சிறந்தது. ஆனால் விவசாயிகள் இதை ஒரு சுமையாகக் கருதுகின்றனர்.
  • 6 வாரங்களான செம்மறிக்குட்டி, கன்றுகளுக்கு இதைச் செய்யும்போது அதன் ஆண்குறியில் ஒரு இரப்பரை மாட்டி இரத்தம் வீணாவதைத் தடுக்க வேண்டும்
  • ஒவ்வொரு கன்றிற்கும் செய்யும்போது உபகரணங்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்
  • டெட்டானஸ் போன்ற நோய்ப்பரவலைத் தடுக்க தகுந்த தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டிருக்க வேண்டும்.
  • வயதான கால்நடைகளில் ஆண்மை நீக்கம் செய்வது சிரமமான ஒன்றாகும்
குடற்புழு நீக்கம் செய்தல்

கன்றுகளுக்கு மாதம் ஒருமுறை முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளித்தல் வேண்டும். அவ்வப்போது சாணத்தைப் பரிசோதித்து உரிய குடற்புழு நீக்க மருந்து அளிப்பதால் குடற்புழுக்கள் நீக்கப்பட்டு கன்று உட்கொள்ளும் தீவனம் முழுமையாக உட்கிரகிக்கப்பட்டு கன்றின் துரித வளர்ச்சி விரைவில் பருவமடைதல் உடல் எடைபெருக்கம் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
மேலும் அவ்வப்போது உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். கன்றுகள் ஆரோக்கியமாக இருக்கத் தகுந்த உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.

(ஆதாரம்: http://www.lifestylwblock.co.nz/articles/general/37_disbudding.htm)

Read more...

  © Agriinfomedia 2009

Back to TOP